Friday 21 September 2012

ஒரு கழுதை பேசுமானால்... என்ன பாடும்?

Page-2.
அவள்: ஒரு கழுதை பேசுமானால்... என்ன பாடும்?

அவன்:

கடவுள்... கழுதையாகப் பிறக்க வேண்டும்! - அவன்
மனிதபேத அழுக்குகளை சுமக்க வேண்டும்!
தெருக்களிலே காகிதமே (பொறுக்கி?)
தின்ன வேண்டும்! அவன்
கழுதை என்றால் என்னவென்று அறிய வேண்டும்!


எத்தனை உயிர்ப் படைத்தான்!
எல்லோர்க்கும் தீனித் தந்தான்!
அத்தனைத் தீனியிலும்
காகிதமா கலந்திருந்தான்?


சிங்கப்பூர்... சாலைகள் போல் - உலகில்
குப்பையே (காகிதமே) இல்லை என்றால்,
எங்கே என் காகிதமே! - என்று
தெருத் தெருவாய் அலைந்திடுவான்!

(கடவுள்... )

அவனை இழுத்துவந்து...
கால்களுக்குள் பனை ஓலை கட்டி,
ஓடடா ஓடு என்று - தெருவில்
ஓட விட்டு நான் பார்த்திடனும்!


ஈரிருகால் இடிபடவே தாவித்
தாவி ஓடிடுவான்

ஓடி ஓடி களைத்த பின்பு
பாவி அவன் கழுததைச் சாதிப்
படைக்காமல் நிறுத்திடுவான்! (கடவுள்... )


To go Page - 1,



To go Page - 1,
(click) :

Click: Classic - படவரிசை (தற்காலிக சேமிப்பில்)

மேலும் கதைகட்கு
< சொடுக்கு >

No comments:

Post a Comment