Thursday, 4 October 2012

என் அன்னையை இழந்ததிலிருந்து, நான் தொடர்ந்து கற்றது...








Click:   வகுப்புபேத ஒழிப்புக்கு
              (அறிக்கை)






மூவாறு வருடம் முடியா இளைமையிலும்,
தீயாறு போன்றன்று தீண்டிட்ட காய்ச்சலினால்,
மூவாறு மாதமேஎன் முகம்பார்த்த அன்னையை,
காவாத கடவுள் எதற்கு?


செங்கோடன் தந்தைத் திருத்தியபேர் மாணிக்கம்;
அன்று மதம்மாறி ஆண்டவரே என்றிதயம்,
விம்மதினம் செபித்தும் வெடித்தநோய் மாரடைப்பால்...
தும்மிடும் நேரம் தொலைந்தார்!


முப்பொழுதும் உன்னை முருகா எனத்தான்என்
அப்பனின் அய்யன் அழைத்த அவர்வாயுள்
புற்றுநோய் வந்து புழுத்துஅதில் செத்ததினால்,
கற்றேன் கடவுளில்லை என்று!


ஆண்டவனே! ஆண்டவனே! ஆண்டவனே! என்றில்லா
ஆண்டவனைப் போற்றுகின்றீர் அன்றாடம்; வேண்டவனை
அட்டை எனப்பற்றி அகிலம் அதிசயிக்க,
முட்டையின்றி கோழி முளைக்க!


கோயில் களுள்பதுக்கும் குப்பைஅன்ன செல்வங்களை
வா!எடு தெய்வம் மறுக்காது; ஆய்.. அரசே!
வேலையில்லாத் திண்டாட்டம், வீடில்லா ஏழ்மைநிலை
ஆலைகள்காண் ஆட்சிகளால் தீரும்! 


           Click:    வகுப்புபேத ஒழிப்புக்கு (அறிக்கை)

No comments:

Post a Comment