உ ண் தேன் என்று திறந்திட்ட
மென்இதழ்கள்...
ஆரஞ்சுச் சுளைகள்!
வீண்நீ என்று முறுவளிக்கும்
வெண் பற்கள்...
முல்லை மொட்டுக்கள்!
ஆண் நீ வா என்று,
அதரங்கள் தடவிடும் நாக்கு!
சிற்றுண்டி கடை கேக்கு!
என் திசை நோக்குஎன்று
ஏக்கமாய் ஊடுருவும்
கண்கள்...
பாலுள் மிதக்கும்
நாவல் கனிகள்!
பாடும் இசைநீ
இந்தப் பாவை பாட
உடன் இணை என்று
பட படுக்கும் இமைகள்...
வண்ணத்துப் பூச்சி
சிறகுகளின் அசைவுகள்!
என்மணம் நுகர் என
தன்னுள் புடைக்கும் மூக்கு...
கிளிகள் நாணும் கவர்ச்சி!
ஒவ்வொரு நிலையிலும்
என் அழகு, உனக்கு
குருடன் யானை...
கதை நிகழ்வே!
Click [URL]:
https://plus.google.com/
No comments:
Post a Comment