Saturday, 31 May 2014

மயக்கம்தர...எதுவோ?


தமிழா? தமிழ்தெளிக்கும் சுவையா? சுவைகொடுக்கும்

அமுதா? அமிழ்தளிக்கும் மணமா? மணம்ததும்பும்
இதழா? இதழவிழ்க்கும் மலரா? மலர்சிதறும்
மதுவா? மயக்கம்தர... எதுவோ?
உன் புன்முறுவலே!

சந்திரனின் றுருளும் தரணிமகிழ் ஒளியா?

சிந்தனையுள் நிலைத்த தேர்ந்தகவிச் சுனையா?
அந்திநிற மும்மயங்கி அதரங்க ளிடையே முயங்கும்
தண்தமிழின் இனிப்பா?
நின் தளிர்நகையின் சுரப்பே!

அலைகடல் அழைப்பா? அசைநுரைத் தெரிப்பா?

இளமைவன சொலிப்பா? இலைகொடி யிடைகாணும்,
நிலவுஒளி களிப்பா? நீந்தும்நதி நினைப்பா?
அழகுமுல்லைச் சிறப்பா?
உன் அதரம்அவிழ் சிரிப்பே!

Click [URL]

https://plus.google.com/

       


No comments:

Post a Comment