Friday, 14 November 2014

உலகத்தின்பிற வளைத்தளங்களில்...[Wills in Kavithai Chittu]

I
E.Mail received by Wills in Kavithai Chittu from
Dalai Lama         Honourable World Welware Advisor and Leader -      Click: Verses for Dalai Lama
முத்துச்சரம்]

அமிழ்தஊற்றால் துள்ளி
http://tamilamudam.blogspot.com
+1,442,643உலகத்தின்பிற வளைத்தளங்களில்...                 
[Wills  in      Kavithai Chittu]
  ஏதென்சு நகரத்து எழில் மிகு வாலிபன்]
  [The Hagley's]Comment     on the post "The most beautiful sunset I have ever seen...":
  Thanks: Dinakaran E-Mail Paper News [Part-I]      >     Part-II.                 
  Tamil Manam   படவரிசை  படவரிசை 02/11/2012  படவரிசை 26/10/2012




கேள்வி:

 "பெண்களின் விதவைக் கோலம்" என்று தலைப்பிட்டு நீங்கள் கவிதைச் சிட்டு (சனவரி 1990 இதழில்) எழுதியுள்ள -

"
கற்புக் கசாப்புக்காரன்
காதலித்து வெட்டுகிறான்;
ஆடுகளோ...
கதறாமல் மடிகின்றன"

--  விளக்கம் தேவை!  

  Photo 

                                                  Go :    பதில்//விளக்கம். 





Saturday, 8 November 2014

புவனமே! என்னை நீ, நினைத்தால்...


Photo: Christa Brittany Allen, Owner.

என் புவனமே! 
தினமும் உன்னை நினைத்து...                                           துருவப் பனிமல, ஆகினேன்! 
என்னைப் பார்க்க நீ முற்பட்டால்,                                                                 உருகி... நதியாகிடுவேன்! 
என்னோடு பழகினால்...                                                                                     கூடு துறை  ஆகிடுவோம்! 
பிரிந்தால்,  ஆவி அன்ன...                                                                        சூடாகி மறைவேன்!   
நினைத்தால் குளிர்ந்து  மழையாகி,                                                        இங்கிருந்து குதிப்பேன்!


Thursday, 30 October 2014

மூடாதபனி ஆற்றுக்குள் நீந்திநீ விளையாட...

 
   Photo :  Ishitha Iyer



அவன்:

ஆடாத காற்றுக்குள் புகுந்து அசைந்தேன்!

அறியாத இறைஎன்று உனக்குத் தெரிந்தேன்!

மேடான உன்படையலுக்குள்பசி மறந்தேன்!

ஈடேது இணைஇவளுக்கு என்று

உன்னோடு இணைந்தேன்!


அவள்:

நீவாட காட்டுக்குள்,

தேடாமல் தேனெடுக்க இசைந்தேன்!

சூடானஉன் கவிதைகளுக்குள்

சுகமாகச் சுழன்றேன்!

மூடாதபனி ஆற்றுக்குள்

நீந்திநீ விளையாட...

ஊடாமல் அனுமதித்தேன் எனக்குநீ...

சந்தனம் தடவ மணந்தேன்!

 

Tuesday, 28 October 2014

உன்னை நான் தவற விட்டேன்!



உன்னை நான்  தவற விட்டேன்!
என்னை நான் குமுற விட்டேன்!
உணர்வுகளை மடிய விட்டேன்!
உயிரை முடிய விட்டேன்!
உண்மை துறவி ஆகி விட்டேன்!

கண்ணை மூடி  இருள விட்டேன்!
பிறந்தது எனக்கு தெரிய வில்லை!
இறந்தது நினைவில் இல்லை!
எங்கே என்றன் உயிர்மூச்சு?

உன்னைத் தொட்டு உணர...
எங்கே அவன்? இறைவனும் இல்லை!

Saturday, 16 August 2014

அந்த பாற்கடலை  நீயும் காணலாம்!

https://plus.google.com/u/0/app/basic/photos/+Karin
Frauenfeld/album/

 
Photo:   Karin Frauenfeld

புலி:

அந்தப் பாற்கடலை நானும்,
காணனும்!
அதை பரந்தமான் போல,
கடையனும்!

ஆடும் அலை இடையில்,
ஆரவுப் படம் பார்த்து,
ஊடும் திருமகளை நோக்கனும்;
பசிதீர அமுது எனக்கு,
அருள்க என்று கேட்கனும்!

நாய்:

உமையின் சிவன்கதையில்,
பறையும்...
உருளும் மேருஅன்ன...

அமைந்த இணை மலைகள்
உச்சிகளைநீ காணனும்!
பின் தாண்டனும்! 
[அங்கே]

உன்தொப்புள் வயிறு அன்ன;  
ஒரு அகன்ற சமவெளி...
தென்படும்;
அதை கடக்கனும்!

சம... வெளியை அடுத்திருக்கும்;
எழில்... மேடு மணற்பரப்பு;
நடுவில்...
மோதும் அலை கடலுள்;
ஆழம் எண்ணாது... 
இறங்கனும்!

அங்கே திருமகள் அமர்ந்திருக்க,
அரவு படுத்திருக்கும்!
பாற்கடலை நீயும்...
காணலாம்!

தூங்கும் பெருமாளை, 
எழுப்பு...
பாற்கடலை [நீயும்]
கடையலாம்!
Photo

Monday, 11 August 2014

பலாச்சுளை தேன்சொட்டும் நிலமே!

https://plus.google.com/u/0/app/basic/stream/

பலாச்சுளை தேன்சொட்டும்...
வனநிலமே!
உலாப்போகும் நிலா வானமே!

செலாப் பணமோ? நான்...

கவிதைகள் பாடும் களமே?

கலா காணுமோ? நம்நினைவுள்... நொடிக்குநொடி கனியும் காதலே!

 

போகின்றாய் நான்உன்னைத் தினமும்...

காணாத தூரத்தில் விலகினாய்;
நோகின்றேன் மனம்!

உன்னை நினைத்தே தினம்...

மரித்து உயிர்கின்றேன் நான்!

 

மரிக்கவா? இன்றும் உன்னைக்
காதலிக்கின்றேன்!

விரைந்து திரும்பவும் உன்னை...

அடையவே ஆசை கொண்டேன்!

காதலால் இதோ புறப்பட்டேன்!



http://willsindiastamil.blogspot.in/2014/08/blog-post_11.html?m=0

நான் மயங்கிட்டதோ, உன்நினைவினிலே

https://plus.google.com/u/0/app/basic/stream/

காதலி... காதலி[என்] 

காதலர்நீ என்றே,

காதல் கனிநாவல் விழிகளால்;

என்னை உண்ணும்...

காதலிஉன்னை விலகிஎன் 

கவிதையோடு வேறு...

மாதுஎவளை காண்பேன்?நான்,

மயங்கிட்டதோ...
உன்நினைவினிலே!

Wednesday, 30 July 2014

ஏக்கமாய் நோக்காதே! என்றன் தூக்கத்தை...

https://plus.google.com/u/0/app/basic/photos/

ஏக்கமாய் நோக்காதே! - என்றன்

தூக்கத்தை இரவுவர தீய்க்காதே!

காக்க உன்னை வைப்பேனோ? எனக்கு...

வீக்கம்பெற ஆசை ஆக்காதே! 
காதல்வெறி...
மீண்டும் மீண்டும் ஏற்றாதே!

கண்ணுள் குதித்துக்கற் கண்டாய்,
உடைப்படாதே!
என்கனவே... தூங்கவிடு என்னை!

Thursday, 17 July 2014

வான்  பரப்பில் உலா வரும்  தாரகையர் கலைக் களம்!

View photo [Click > URL]:
https://plus.google.com/u/0/app/basic/photos/

வான்  பரப்பில் உலா வரும்,
தாரகையர் எழில் ஒளிரும்...
கலை நிலைக் களம்!

காண் சுற்றிட அவாக் 

கொள்ளும்...
தேன் ஈக்கள் புகா வனம்!

ஆசை ஒழுகும் பலாப் பழம்!

நான் அதிசயிக்கும்...
நிலாத் தளம்!

பூமியில்... ஒரு  சிலருக்கு,

கவர்ச்சி அக்கிரமம்!

பலர் பார்வைக்கு உன் அழகு,

சுவைக்கும் அப்பளம்!

எனக்கோ இன்னமும் அடையாத,

செவ்வாய்க் கிரகம்!

Wednesday, 16 July 2014

உன் விழி... வெட்டிலே உருசி அறி!

View photo [Click > URL]:
https://plus.google.com/u/0/app/basic/photos/+Spotraters/album/

அவன்:

நிலவை முகில் வருடிட,
ஒழுகிடும்...
நினைவு மழையொடு;
அமிழ்து கவிதை கனிய...
சுவை சொட்டிடும்,
காதல் தேன்கூடு நீ!

எட்டுமோ கனி?
பட்டுஎழில் சுழி...
தொட்டு, சூடு நீ தணி!

அவள்:

லட்டுச்சுவை அணி!
தட்டில் இட்டு வெட்டு;
காதல் திட்டில்...
நீ, வெற்றிச்
சுட்டிதான் இனி!

இது ஒட்டும் மாங்கனி!
எட்டிப் பற்றி
தட்டித் தொடு,
கிட்டுமேஉன் விழி...
வெட்டிலே உருசி அறி!

Wednesday, 9 July 2014

வேர்கடலை போல் வாய்பிளக்க...

View photo [Click > URL]:
https://plus.google.com/u/0/app/basic/stream/

பரந்தாமன் கதை அன்ன;
பாற்கடலுள்... பார்!
வேர்கடலைபோல் வாய்பிளக்க,
பாம்பு, படம் எடுக்கும்; சீண்டாதே!

பார்! சிறுவனே, நான்பூ அல்ல!
போர்க்களமாய் என்னை;
நோட்டமிட நீ  என்ன...
பாரதக்கதை அர்சுனனோ?

ஆர்ப்பரிக்கும் அல்லி என,
வில்வேல் ஆயுதமாய்...
என்னுள் உண்டு...
இமைவிழிகள்!

மோத முயன்றாயோ,
பழனிமலை அன்ன,
கேடயங்கள்... இரண்டு,
எதிர் கொள்ளும்!

திரும்பிப் பார்க்காதே போ!
பக்கம் வர, உன் தலை...
பாற் கடலுள் மூழ்கிடுமே!
 உருண்டு, என்...பாதம் தொட்டு,
உயிர் விடுமே!

Monday, 7 July 2014

அந்த ஒரு  பார்வைப் போதும்!

View more arts  [Click > URL]:
https://plus.google.com/u/0/app/basic/stream
 
Artist:  Sauro 

அந்த ஒரு  பார்வை போதும் - நான்
அன்றாடம்  வாழ! 
உன்மேல் என்பாசம்...
ஒவ்வொரு நொடியும் வளரும்!

அந்த நிலவு ஒளிஅன்ன நானும்;
உன்னை நினைப்பேன்!உன்கனவில்...
தினமும் மழலையாகி, சிரிப்பேன்!

எல்லா நாளும் பகலும் - நீ,
எங்கிருந்தாலும் உன்நினைவில்;
சுவர்மேல் சாய்ந்து மனத்துள்...

உன்னை எண்ணி தவிப்பேன்!
நனவில் உன் முகம்...
கற்பனையில் தோன்ற, துயில்வேன்!

Sunday, 6 July 2014

இவளின் அழகிய இதழ்களின் திறப்பில்...

View photo [Click > URL]:
https://plus.google.com/u/0/app/basic/stream/

சிவனின் கதையாய் திரிபுறக் கண்ணால்...
இவள்எதை நோக்கினும்,
இன்பம் மகிழும்!
அவிழும் இதழ்கள் அழகிய 
திறப்பில்...
எவனும் இழப்பான், உயிரே!