Monday, 11 August 2014

பலாச்சுளை தேன்சொட்டும் நிலமே!

https://plus.google.com/u/0/app/basic/stream/

பலாச்சுளை தேன்சொட்டும்...
வனநிலமே!
உலாப்போகும் நிலா வானமே!

செலாப் பணமோ? நான்...

கவிதைகள் பாடும் களமே?

கலா காணுமோ? நம்நினைவுள்... நொடிக்குநொடி கனியும் காதலே!

 

போகின்றாய் நான்உன்னைத் தினமும்...

காணாத தூரத்தில் விலகினாய்;
நோகின்றேன் மனம்!

உன்னை நினைத்தே தினம்...

மரித்து உயிர்கின்றேன் நான்!

 

மரிக்கவா? இன்றும் உன்னைக்
காதலிக்கின்றேன்!

விரைந்து திரும்பவும் உன்னை...

அடையவே ஆசை கொண்டேன்!

காதலால் இதோ புறப்பட்டேன்!



http://willsindiastamil.blogspot.in/2014/08/blog-post_11.html?m=0

No comments:

Post a Comment