Wednesday, 2 January 2013

பொங்கல் இனிப்போடு...சிட்டே சிறகுவிரிசெல்!

All Job Advices Sites


                                                            Willswords Tamil Twinkles
WELCOME YOU!
                                                                                                                                                 பொங்கல் இனிப்போடு...
புத்தாண்டில்வாழ்த்துகிறோம்!
சிட்டே சிறகுவிரிசெல்!

                                                                                                                                                                  பொங்கலிடு திங்களிது புத்தாண்டில் வாழ்த்துகிறோம்!
சென்றுலகு சுற்றிவந்(து) எங்களிடம் - பொங்கல்!
எத்தனைப்பேர் வீடுகளில் பொங்குதென் றேசொல்ல...
சிட்டே சிறகு விரி!

எட்டுத் திசைசென்றே எட்டாத செய்திகளை,
கட்டுக் கதைவிலகி கற்பனைகள் சேராது,
கட்டுரையாய் காவியமாய் கண்டுவரக் காயமெங்கும்,
சிட்டே சிறகு விரி!  ரி!                                                                                                                                                             
பற்றிஎரி யும்வயிற்றைப் பாச முடன்தடவி,                                            சட்டினியைத் தொட்டுதினம் சாதம்எனக் கூழ்களியை,
பிட்டுண்டே இன்றும் பிழைப்போர் உயர்வுபெற,
சிட்டே சிறகு விரி!

தொட்டுகரம் தாலிகட்டி தூயவளை கொடுமைசெய்து,
தட்சணைகள் கேட்டுத்தரம் தாழ்ந்து மறந்தவனை,
கட்டி இழுத்துவந்து காலில் விழச்செய்ய...
சிட்டே சிறகு வரி!

கொட்டும் பனிமலையை விட்டும் சமவெளியை,
தொட்டும் அலைகடலுள் தூங்குகின்ற கங்கையினை,
வெட்டிகால் வாய்வழியே வீழச்செய் காவிரியுள்!
சிட்டே சிறகு சிறகு வரி!
 
சாதி மத வகுப்பு சண்டை ஒழி நாட்டுமக்கள்...
நீதிபெற நீஉயரு; நீயுயர பேதமறு!
புத்தாண்டில் வாழ்த்துகின்றோம் பொங்கல் இனிப்போடு,
சிட்டே சிறகுவிரி செல்!

                Recent verses:   மதம் வகுப்பு விலகி தேசியம் பேசு அது நாட்டுப்பற்று
                                                      
மூளைநிலை ஆய்வில் கருஆன கவிதைகள்!
                                                          சுவாசயியக்கம்... கழலஉடலம் ஆவிபேசுமோ?

                      Newness:         மரணமடைந்த டெல்லி மாணவிக்கு…       

 
Willswords Tamil twinkles  WELCOME YOU!
  

Who are preventing Peace Entry?
Say in our country’s unity!
If religions or classes’ believers
Why should there be different opinions?
In peoples’ lives and nations thoughts;                           [Next]    

                                                                      


 
             





 

                                                                                                          






 
 





No comments:

Post a Comment