மானம் என்ற சொல்லால் மறைந்திட்ட மா இனம்!
முன்னுரை:
தமிழில் பலரும் அறிந்திருக்கின்ற ஒரு பழமொழி 'மானம் போயிற்று பிராணன் போயிற்று'. இதனுடைய மெய்யான அர்த்தம், மதஆதிக்கக் களத்தினின்று பேதம் ஒதுவோர்களால் உயிராக (உயர்வாகவும்) எண்ணப்படுகின்ற வர்ணாசிரமம்
(சாதிகளின் ஆளுமை), மக்கள் நாத்திகர்களாக மாறினால் ஒழிந்துவிடும்". அதாவது, இந்துமதம் அழிந்துற்றதென்றால் உடன்நிகழ்வாக பிராமணியம் எனப்படும் கற்பனை மானுடம் (வேடம்), களைவுப்பட்டு இல்லாது மறையும்.
இவற்றை, பின்வருமாறு உள்ள 'மானம்' என்னும் தமிழ் வார்த்தைக்கான சொல், பொருள், ஆய்வுரைகைள் மூலமாக விளங்கிக் கொள்ளபட முடியும்.
2)தமிழ்மொழியுள்
நடைமுறையில் இருந்திடும் ஒன்று மற்றும் இரண்டெழுத்துக்
களில் முற்றுப்பெறாத ஆனால் நிகழ்வுகளை ஆதாரங்களாக வெளிப்படுத்தும் வார்த்தைகளை தேர்வுசெய்து தனித்தனிச்
சொல்லாக நுணுகி ஆய்வுச் செய்து முறையே, அவற்றின் மெய்யான அர்த்தங்களை கண்டறிய முற்படுகையில், தமிழ் சமுதாயத்தின் பல உண்மையான சரித்திரத் தொடர்களை, பழக்கவழக்கங்களை மற்றும் பயன்படுத்திய உடமைகளைப் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்புக்கள் கிட்டும்.; தமிழில் பேசப்படுகிற அநேகமாக எல்லாச் சொற்களுக்குமே அவை அவசியமான எழுத்துக்களுடன் முழுமை பெற்றிருக்காத போதும், மூலஅர்த்தங்களை அறியப்படும் படிக்கு, தலை முதன்மை) எழுத்துக்களாக, மற்றும் தாய்ச் சொற்களாக, உரிய சொல் ஆட்சிகளுடன் [உ-ம். வா போ நீ கா மா சா(வு) நில் தேய் தண் உண் - என்று இப்படி] ஏராளமாக உண்டு.
3) அந்தப்படிக்கு, ஈ இனம் என்பது, 'இனம்' ஆயிற்று. மா இனம் என்பது, 'மானம்' ஆயிற்று.; 'மா இனம்' இழந்தவன் என்பது, காலப்போக்கில் 'மானம் இழந்தவன்' என்றோர் புதிய அர்தத்தில், தவறான புரிதலாயிற்று.; மானுடம், மதம் வகுப்பு சாதி என்பதாக, என்று பிரிவுற்றனவோ அன்று மா இனம் என்பதானது மறைவுற்று, மோதல் கரு உற்றது.; மோதல் பின்னாளில் மோதம் என்றோ மாதம் எனறோ மாறிட்டதாக கணிக்க தலைச் சொற்கள் இல்லை;; என்றாலும் பேதங்கள் மற்றும் மோதல்கள் செய்திடுவதற்காகவும் மதம் எனும்படிக்கு நிலைமை உள்ளதால் மதம் (வெறி)
ஆயிற்று.
4) இந்தப்படிக்கு, 'ஈ இனம்' என்பது குறைந்த எண்ணிக்கையிலான இனம் என்பதாகவும் அந்தப்படிக்கு மா இனம், பெரிய எண்ணிக்கையைக் குறிப்பிடுவதாகவும் அமைந்துற்றன. அதனடிப்படையில் ஈ இனம், மா இனம், உள்ளதோ? என்கின்ற கேள்வி துளிர்த்திட்டது. அது காலப்போக்கில் "மானம் ஈனம் உள்ளதோ" என்ற வரிவடிவத்தில் பொருள்மாற்றம் பெற்று, தமிழர்கள் ஒருவரையொருவர் சாடுவதற்காகப் பயன்பட்டது.
ஒன்றுபட்டு வாழ்ந்திட்ட நாகரிக மனித குணத்தை முற்றுமாகப் புரட்டிப்போட்டது. சூழல் அடிப்படையில் தமிழுள் ஏற்பட்ட மொழிச் சிதைவுகளால் தமிழன் திராவிடர்கள் என்று அய்ந்து கூறுகளாகின்றான். திராவிடருள் தீராத எல்லைத் தொல்லைகள், நதிநீர் சச்சரவுகள், சாதி மற்றும் மதங்கள் அடிப்படையில், பேத மோதல்கள் என்று சண்டைகள் கரு ஆக, மா இனம் போர் இனம் ஆயிற்று.
5) தமிழரின் மேற்படி மா இனமான பேரினம் [பெரிய இனம்], பிளவுண்டு மோதல் இனமாக மாறிட, போர் இனம் என்று பிரிய நேர்ந்தது.; போர் இனம் மோதல்களைச் செய்து பேர் இனம் [அதாவது பெயர் பெற்ற இனம்] என்று ஆயிற்று.; பேர் இனம் என்பது போர்களில் வென்றதால் வந்துற்றது என்கின்ற உண்மையானது காலப் போக்கில் மறைந்து, பெரிய இனம் ஆயிற்று. அந்தப்படிக்கு, 'இன மா யினம் காக்க...'
என்று அவ்வப்போது தமிழ் பேசப்படுகிறவர்களால் போர்முழக்கமே போல் ஆர்ப்பரிக்கப்
படுகிறது. தமிழர்கள் திராவிடர்களாக பிளவுண்ட பின்னர், அந்த இனத்தின் தமிழ் மா இனம் காக்க... என்ற பொருளடிப்படையில் 'தமிழ் அல்லது தமிழர் மானம் காக்க...' என்பதானது, போர் முழக்கமாய் நெருக்கடி ஏற்படுகிற போதெல்லாம் அதிர்ந்து, ஆனால் சாதிக் கூறுகளால் பேதப்பட்டு வகுப்பு அடிப்படையில் எதையும் முடிவுசெய்திடும் நிர்பந்தஙகளால் மெலிந்து, இனம் மட்டும் அல்ல தமிழர் என்ற அடிப்படை அர்த்தமும் பலப்படாததால் கோரிக்கைகட்கு அடிப்படை இருந்தாலும், மேற்படி முழக்கங்களானது அவ்வப்போது பிசுபிசுக்கின்றது.
6) மேலே பத்தி (2)ல் உள்ளபடி மா இனம் என்பதிலிருந்து மானம் என்பதானது துளிர்ந்திட்டது
என்பதால் அதனடிப்படையில் அவமானம் என்பதும் கிளைவிட்டது. அவளுடைய அல்லது அவனுடைய என்பதானது 'அவ...' என்கின்ற ஈரெழுத்துக்களில் குறைச்சொல்லாக சுருங்கி... ஆக 'அவ...' என்ற அவ்ஈரெழுத்துச் சொல்லுடன் மா+இனம் என்கின்ற இரு கூட்டுச் சொற்கள் இணைய, அது 'அவ+மா+இனம்' என்றாயிற்று.; அதனடிப்படையில் அவமானம் என்பதற்கு [சாதி விலகி ஒருவர் காதல் மணம் புரிகிற போது அவர் சார்ந்த சாதி மா இனமாக இதுவரை இயங்கியது, இப்போது], அவளுடைய அல்லது அவனுடைய சாதி மா+இனம் ஆக, ஆயிற்று என்று புரிதலாகின்றது;
அதனால், 'மானம் போயிற்று' என்பது மா+இனம் நிலைப்புரண்டு விலகிட்டது என்று பொருளாகின்றது.
7) இப்படியே, பா இனம் என்பதும் பா இனர் என்றாகி, பாணர் என்றும், அவர்கள் புலவர்களாக (உ-ம். இராமாண ஆசிரியர் வால்மீகி) மற்றும் புரவலர்களாகவும் (உ-ம். கடை எழுவள்ளல்கள், குறிப்பாக பாரிவள்ளல், அம்மன்னனின் குமாரத்திகள் மற்றும் அவர்களின் பிறப்புவழி முன்னோர்களும் அரசபரம்பரையினரும்) மானுடத்துள் தமிழ் புலமையில் உயர்ந்து சிறந்திருந்திட்ட காரணத்தால் மேலும், அன்றைய நிலையில் அவர்கள் இயற்கைச் சூழலால் மலைகள் மற்றும் பாறைகள் மீதும் [மேட்டுக் குடிகளாக] வாழ்ந்தவர்கள் என்பதால் பாறை அய்யர் என்றும் அரசர்களாக இருந்து முன்னோர்களின் செயல் (பாக்கள்) நிலைகளில் நீதி உரைத்திட்ட காரணங்களால்
பா+உரையர் என்றும், பா உரை அய்யர் என்றும், இந்தியாவின் இருண்ட கால தெடக்க நாள் முடியவும் போற்றப்பட்டனர் என்பதும்,; தமிழர் வரலாற்றை இருண்ட காலத்துக்கு அப்பால், கடை எழு வள்ளல்கள் மற்றும் இராமாயண காவிய ஆசிரியர் ஆதிப் பா உரை அய்யர் வால்மீகி முதலானோர் வாழ்ந்திட்ட காலங்கட்குச் சென்று நிகழ்வுகளை முறையே ஆய்வுச் செய்கையில் தெளிவுப்படும்.
Go: [பக்கம்- 2] 2]
|
Show large loving, to your parents;
As such wishes on your wife;
Learn good characters,
For children and country;
Aim to remove...
The difference among nations;
Plan your thoughts, for uniting people;
And grant you yourself,
For Mother Tongue’s growing!
[Next]
|
|
No comments:
Post a Comment