Sunday, 30 September 2012

ஒரு கவிஞன் காதலன் ஆனால்...?


                                                                                        Page – 2. 


 
அவன்:
 
அமிழ்தசுனை அலைச்சுழல்போல் சுழல்குழியாய் நெழிந்திடுதே! - அட!
திமிர்த்தனமாய்ச் சுழன்றஎழில் சிறுநாபி எனமாறிட்டதே!
கார்முகில்கள் மயங்கியிவள் கவிதைக்குழல் ஆயிற்றே! - அந்தக் கூர்ப்பிறையும்  இவள்நெற்றியைத் தன்அசலென்றே [இக்]
                                                                                    குமரிமுகம்  நோக்கிடுமே?         
 
 சரிந்துமது தெளிக்கும்கிண்ணம் பருவம்கண்டு தழும்பிடுதே! - தென்றல் விரிந்துதழுவ காதல்மூச்சு வெளிக்கிளம்பிக் கனலாகிடுதே!  அரிந்துவைத்த மாவடுபோல் அழகுநுதல் ஈர்த்திடுதே! 
தெரிந்(து)வைத்த முத்தாரப்பல் தேன்இதழ்கள் திறந்திடுமோ?
 
 
நாணம், நழுவிடுமோ? நிலவு தழுவிடுமோ? முகிலை!
வானம், முனகிடுமோ? மழையைச் சிதறிடுமோ? புவியின்...
மேனி, சிலிர்த்திடுமோ? மெளன நதிநெகிழ - நெருங்கி
வாநீ எனகாற்று, ப்பெண் மதுஇதழை மெதுவாய் வருடிடுமோ?
 
 
To go Page - 1,
 
 
 
 
 
 
 
 
 
To go Page - 1,
(click) :
Click:                          
 
 
மேலும் கதைகட்கு             
    < சொடுக்கு >
 

Tuesday, 25 September 2012

அன்பார்நத கவிதைச் சிட்டு வாசகர்கட்கு,


 
வகுப்பு பேத ஒழிப்புக்கு,
                தொழில்வாரி இடஒதுக்கீடு!
 
         சொடுக்கு:         வகுப்புபேதஒழிப்புக்கு(அறிக்கை)
 
 
 அன்பார்நத கவிதைச் சிட்டு வாசகர்கட்கு,
 
 
நீண்ட பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் இந்தக்கடிதம் எழுதப்படுகின்றது. வகுப்புப்பேதம் சமயச் சார்பு ஏதுமின்றி ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட வாசகர்கள் பேராதரவில் என்னை *ஊக்குவித்திருக்கின்றீகள் அதே நினைவுகளுடன் இவ்வறிக்கையானது தயாரிக்கப் பட்டிருக்கின்றது;  இதை அன்றுபோல் ஆசிரியர் உரையாக (Editorial-ஆக) எடுத்துக்கொண்டு,  நமது எதிர்கால வாரிசுகள் இந்தியராய், ஒரே மக்கள் என்கின்ற உணர்வுகளுடன் மனத்தால் ஒன்றுவார்கள்;  செயற்பட முற்படுவோம்  வாருங்கள்!
               
*நமது கவிதைச் சிட்டு 2வது இதழில் நான் எழுதிட்ட கவிதையை உங்களுக்கு நினைவுப்படுத்திட விரும்புகிறேன்; அநேகமாக, உங்கள் மனதிலும் அது பதிந்திருக்கும் என்று நம்புகின்றேன்!
 
 
உச்சிக் குளிர்ந்திட, உள்ளம் இனித்தது!
மெச்சிட... மெச்சிட வாசகர் மெச்சலில்...
அச்சம் அகன்றுநல் அன்பு மனங்களில்,
சொக்கிச் சுழலுது சிட்டு!
 
 
அறிக்கையை முழுமையாக படிக்கப்பட்டதும் இந்திய தேசத்தில் அனைவரும் சமூக நீதியைப் பெற்றிட மக்கள் ஒற்றுமைக்கு வித்திட ஒவ்வொருவரும் தேசப்பற்றுடைய அவர்களின் நண்பர்கட்கு மற்றும் உறவினர்கட்கும் தவறாது SMS செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
 
 
                                            ***