Saturday 15 December 2012

Readers in Kavithai Chittu and their eagerness!

All Job Advices Sites
அடியிற் குறிப்பிட்ட கவிதைச்சிட்டு வாசகர்கள்/கவிஞர்களின் முகவரிகள் நவம்பர்
1990-மாத நிலவரப்படி உள்ளன.கவிதைகள் கவிதைச் சிட்டு நவம்பர் 1990-எண்.4ல்
இருந்து மறுபதிப்புச் செய்யப்படுகின்றன.



கவிதைச்சிட்டின் கருத்துப் பூக்களே! நீங்கள்
                    --
!
கண்டதில் மயங்கும்
காகிதபூக்களே!
நீங்கள்...
கண்ணீர் பூக்கள்!

கண்களில் வளரும்...
காதல் பூக்களே!
நீங்கள்...
கண்ணியப் பூக்கள்!

வசந்தத்தில்சிரிக்கும்
மெளன பூக்களே!
நீங்கள்...
வசீகரா பூக்கள்!

இதயம்விரும்பும்
இனிய பூக்களே!
நீங்கள்...
இளமைப் பூக்கள்!

பகட்டுகள்இல்லா
பாசப் பூக்களே!
நீங்கள்...
பண்புப் பூக்கள்!

ஆசைகள்அரும்பாத
அக்கினிப் பூக்களே!
நீங்கள்...
அறியா(மை) பூக்கள்!

வாடியகொடியில்
மலரும் பூக்களே!
நீங்கள்...
பட்டினிப்பூக்கள்!

பருவங்கள் பறிபோன
பனிப் பூக்களே!
நீங்கள்...
பகலில்ஒளிரும்,
தாரகைப் பூக்கள்!

கவிதைச் சிட்டின்
கருத்துப்பூக்களே!
நீங்கள்
காவியப் பூக்கள்!

-
.சுப்பிரமணயன்,
சம்பளக் கணக்குஅலுவலகம்
(கிழக்கு),
சேப்பாக்ககம், சென்னை-5
 
உழைப்பு!

இதய மலர்... மலர்ந்தது!
எங்கும் மணம் கவர்ந்தது!
எண்ண வண்டுக்கு...
ஓர் மயக்கம்! அது,
தேன் சிந்துமென்று!
ஆனால் -சிதறியதோ...
செங்கரிய இரத்தம்!

-
நித்யானந்தம்
சம்பளக்கணக்கு அலுவலகம்,
சென்னை-5.

 
மேகம்...

உலகோர் வாழ
ஆகாயம் தொட்டு
ஆவியைச் சிந்தி...
உருக்குலைந்து அழியும்
ஏழைத்தொழிலாளி!

-
S.K..பாஸ்கர்
பாக்யலெட்சுமி எண்டர்பிரைசஸ்,
சென்னை-1.






உலக வரைப்படத்தில்...
நாடுகளின் கோடுகளை
அப்புறப்படுத்துங்கள்!
அப்போது-
வருமைக் கோடு[ம்] ..
அழியும்!

-
மங்களம் இளம்பரிதி,
தலைமைச் செயலகம்,
சென்னை-9.

தோழனே!

வரலாறுகளை…
நினைத்து வருந்தாதே!
திருத்து! அவை -
முதலாளிகளின்
தவறான...
மொழிப் பெயர்ப்பு!

-
கோ.மோகன்ராஜ்
இலக்கியஆர்வலர் கழகம்
18, சுந்தரம்4வது தெரு,
வியாசர்பாடி, சென்னை-37.


ஒரு பட்டதாரியின்புலம்பல்!

இருக்கட்டும்...
என் அமுத சுரபி!
வேலைவாய்ப்பு அழைப்பு
அலுவலக அட்டைகளை-
[Interview cards]
ஒருநாள்...
மொத்தமாய்
விலைக்குப் போட்டு
ஒரு அலுவலகத்தையே
விலைக்குவாங்கிட போகின்றேன்!

- மு.இளவரசு,
சம்பளக்கணக்குஅலுவலகம்,
சென்னை-5.


சிறப்புப் பட்டங்கள்!

நான்அப்பாவுக்கு...
தண்டச் சோறு!
அம்மாவுக்கு... தருதலை!
அக்காவுக்கு... தடிமாடு!
தம்பிக்கு... ஊர் பொருக்கி!
ஊராருக்கு... ஊதாரி!
பெயருக்கு... பட்டதாரி!

-
.நாதன்,
சம்பளக்கணக்கு அலுவலகம்,
சென்னை-5.

எதார்த்தம்!

தக்கைகள் மிதக்கின்றன!
முத்துக்களோ...
மூழ்கி -
அமிழ்கின்றன!

-
பாட்டாளிப்பழனியப்பன்,
தலைமைச்செயலகம்,
சென்னை-9.





All Job Advices Sites



 

No comments:

Post a Comment