எடுப்பு:
கல்லே!கல், எச்சிலையும் கல்லே... கடவுளில்லை!
புல்லே! எதையும் புனிதமெனத் தேயாதே!
எல்லை யிலாப்பொய்யால் ஏய்க்கும் மதம்விலகி...
கல்லல்செய் காயம் ஒளிரும்!
உடைப்பு:
தூசுகள் அடர்ந்த காற்றில் - சுவாசமே,
தூய்மை யாக இல்லை!
மாசுகள் படிந்த மதத்தில் - மனிதனும்,
மனித னாக இல்லை!
ஆசைகள் பண்பில் வேண்டும் - அனைவரும்
அன்பிலே இணைய வேண்டும்!
ஓசையாய் உறக்கம் வேண்டும் - அதற்கு,
ஒற்றுமை ஒழுக்கம் வேண்டும்!
பூசல்கள் நாசம் அழிய - கொள்கையில்,
பொதுவான நீதி வேண்டும்!
பாசமும் பரிவும்ஒன்ற - அதிலே,
பகைகளும் புகையும் போகுமே!
தூசுகள் சாதிகள் விலகி - உயர்வுற
தூய்மையில் தேசம் வேண்டும்!
மாசுடன் பேதங்கள்ஓதும் - மதம்விலகி,
தேசியம் பேச வேண்டும்!
If you want true democracy...
Work for peoples' unity;
If we fail to make it, immediately;
In future one day, suddenly...
Our generation will miss country!
[Next] |
No comments:
Post a Comment