Sunday, 9 December 2012

Scientific realities > எதிரியக்கம் > மதமூட நம்பிக்கைகள்!


சுவாசயியக்கம்... கழலஉடலம், ஆவிபேசுமோ?

சூடுப்பட்டு கொதிக்கும்நீர் மேலும் சூடுஆக, நீராவி!
காற்றுள் கலந்து விண்ணைச் சேர, கார்முகில்;
ஆடுவிட்டு மாடுமாறும் சுவாசக்காற்றும் நீராவிபோல்,
ஆகாயமே ஏகினாலும் பெய்மழைவழி, அவனி திரும்புமே!
கூடுவிட்டு கூடுப்பாயும் மனிதமூச்சும், ஆவியாக...
குவலயத்தில் குவிந்தகாற்று... செல்லும்போக்கில் அலையுமே!

ஏடுவிட்டு ஏடுப்புரட்டி எழுதத் தாவிடும், கோலென;
மானுடம்விடும் ஆவிமூச்சும் மதியவெய்யில் காய்தல்போல்,
ஆணுள்பெண்ணுள் சுவாசக்காற்று அங்குமிங்கும் தாவும்நேர்வில்
மூக்குத்தொட்டு நாக்குத் தீண்டஅம் முயங்கலைநீ...
காதல் எனலாம்; கவிதைச் சொல்லலாம்! சுவாசயியக்கம்...
கழலஉடலம்; ஆவிபேசுமோ? பிணம்உ லாவுமோ? அறிவே!


                                                                                                                                              Click:     மேலும்… 
                                                                                                                                                                                                          

இரவில்… குளிக்குமோ பேய்?

No comments:

Post a Comment