Wednesday 12 December 2012

மூளைநிலை ஆய்வில் கருஆன கவிதைகள்!

           All Job Advices Sites   
          எடுப்பு:

நஞ்சை உண்டாயாம்; நாகம்நடனமிட, நிலவில்...
கங்கை கடலாடமண் காவிரிக்கு சுமந்தாயாம்!
மண்ணுள் அடிப்புதைய வான்கடந்து நின்றாயாம்!
உன்னால் இயலாதோ உமையாள் ஈஸ்வரனே!
சண்டைஒழி நாட்டில் சாதியழி இறைவன்நீ!


தொடுப்பு:
சாதிமதச் சகதிகளுள் மாளாதே மானுடமே!
பேதசாதி புழுவாக பிழைகளைநீ தொடராதே!
போதிஞான புத்தனெனஉன் புகழ்பரவ அவனியிலே…
நீதிக்கு உணர்வூட்டு நேர்மையையே ஓது!
உடைப்பு:

பூனைஒன்று குறுக்கே சென்றால்                                            
பொல்லாங்கு வருமே என்பான்!
யாணைஒனறைத் வீதியில் கண்டால்
ஆண்டவனே என்றே குனிவான்
!.

பெருச்சாளி கண்களில் பட்டால்
,
பிழையாய் கடவுள்வாகனம் என்பான்
!
சாணத்தை உருண்டைப் பிடித்து
,
சக்திமகன் என்றே தொழுவான்
!

கழுகொன்றை மரம்மேல் கண்டால்
,
கடவுளாக அதையும் பார்ப்பான்
!
கல்ஒன்றை வீதியில் நட்டு
,
கடவுளே... கதி, நீயே என்பான்
!.

பாம்புக்கு சிலைகல்லில் வடிப்பான்
!
பக்தியொடு பணிவிடை செய்வான்
!
பன்றிக்கு கோயில் பார்ப்பான்! மனிதப்
பண்புவிட்டு வேற்றுமைச் செய்வான்
!

பல்லிகிளி சோதிடம் என்பான்
!
பரிகாரம் செய்யென ஏய்ப்பான்
!
ஆண்டவனாம் உண்டெனப் பிதற்றி
அடிமையாகவே ஓர்நாள் சாவான்
!

தகப்பன்சாக தாயும் என்றாலும்
,
கருணையின்றி விதவை என்பான்
!
அவள்எதிரே வரும்படி நேர்ந்தால்
,
அபசகுனம் என்றும் பறைவான்
!

பெற்றவளைச் சுமையாய்ப் பார்ப்பான்-உடன்
பிறந்தோர்குத் துரோகம் செய்வான்
;
ஆராயும் மூளையை விலகி
...
ஆண்டவனின் பிள்ளை என்பான்!


என்னை உன்னை எவனையும் யாரும் படைக்க வில்லையே!
பின்னை எவன்ப டைப்பிலே பிறப்பெ டுத்தோம் மண்ணிலே,
அன்னைத் தந்தை கலவியில், அவத ரித்தோம் பெண்ண்ணிலே!,
உண்மைஇதுதான் என்பவனை உலக ஞானி என்பனே!
 
                                                                                          Go: A scientific reality


மூவாறு வருடம் முடியாஇளைமையிலும்,
தீயாறு போன்றன்று தீண்டிட்ட காய்ச்சலினால்,
மூவாறு மாதமேஎன் முகம்பார்த்த அன்னையை,
காவாத கடவுள் எதற்கு
?


Click: [மேலும்...]





No comments:

Post a Comment