எத்தனை நாளிந்த கடற்கரையில் - அன்று
இதயம் மகிழ்ந்திருப்பேன்! - என்
அத்தை மகனென வந்தே அணைத்திடும்
நித்திரை கண்டிருப்பேன்!
நித்தமும் வந்திங்கே தீண்டக்கனவுள் - அவன்
நிழற்படம் எடுக்கையிலே - கண்கள்
பற்றக் கரங்களில் முத்தம் பதித்ததில் - நேரம்
சென்றது மறந்திருந்தேன்!
கண்ணகிப்
பெண்களாய்
தோழியர்
சூழ்ந்து
காற்றில்
உறைந்ததையும்
- சிலர்
உத்தமிகள்
பெற்ற
கோவலன்களாய்
கைகள்
கோத்துத்
திரிந்ததையும்...
சுட்டிப்
பையன்கள்
நெருங்கிச்
சுண்டல்கள்
பட்டாணி
விற்றதையும்
- அதைப்
பெற்றுண்டு
காதலர்
ஆங்காங்கே
சூழ்நிலை
மறந்து
தவித்ததையும்...
இக்கடற்
கரையில்
கண்ணுற்றதில்லை
நான்என்
சத்திய
உத்தமனால்
- தினம்
புத்தம்
புதிய'கள்'
போதைப்போல்
முயங்கிட்ட
நித்திரையின்
செயலால்!
புத்தன்என வந்து சொற்பொழி(வு) ஆற்றிடும்
அரசியல் காட்சிகளை - நான்
பக்தனைப் போல்சென்று பார்த்ததில்லை - அவற்றின்
பேதநிலை விளைவே!
அத்தை மகனென வித்தைகள் செய்திடும்
நித்திரையே வாழி! - அவர்
அன்புத் தங்கையேபோல் கண்ணுள்சிரித்திடும்
நிம்மதியே வாழி!
காதல் சிறப்புக் கவிதை > சொடுக்கு :
|
நாட்டு ஒற்றுமைக்கு
அறிக்கை/கவிதைகள்
சொடுக்கு
:
அறிவியல்
+
காதல்
கவிதைகள்:
சொடுக்கு
:
என் - இடதுபுறத்து இருதயமே! அறிவியல் சாந்த கவிதைகள்: சொடுக்கு : countries should be united... |
Thursday, 11 October 2012
கடற்கரை மணலில்... காற்றின் தழுவலில்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment