Sunday, 7 October 2012

சிறந்த தலைமைப் பண்புகட்கு...


                                                        Page – 2.


 
 
அவன்:
 
ஆரம் *மாற்றினாலும் ஆண்மை தொடர்பவனை,
சோரம் போகாமல் சோகம் களைபவனை
வீரம் விலகாமல் விவேகம் காப்பவனை,
பாரம் என்பேனோ பதர்எனவும் சொல்வேனோ?
 
 
வாய்மை உள்வாங்கிச் சாதி மறுப்பவனை
நேர்மை வெளிப்படவே  நீதி  ஓதுவோனை
தூய்மை மனத்துள்ளே  *துளங்க  வாழ்பவனை
ஆண்மை அகலாத மனிதன் என்பேனே!
 
 
வஞ்சம் செய்யாமல் மடமை ஒழிப்போனை
இலஞ்சம் ஏற்காமல் ஒற்றுமையில் நிலைப்பவனை
பஞ்சமும் பயந்தோட மூவாசை விட்டவனை...
தஞசம் ஆவோமே சிறந்த தலைமை என்போமே!
 
 
 
 
 * மாலை மாற்றிக்கொண்ட பின்னரும்
   (திருமணமாகியும்)
* துளங்குதல்  -  பிரகாசித்தல்
 
To go Page - 1,
 
 
 
 
To go Page - 1,
(click) :
 
Click:                        
 
 
  மேலும் கதைகட்கு              
    < சொடுக்கு >

No comments:

Post a Comment