Wednesday 24 October 2012

ஒற்றுமை வளம் உலக நலம்!



  
                      ஒற்றுமை வளம் உலக நலம்!
                                                                                                           முன்பக்கத் தொடர்சி  (Page-2)    
            7)         முதலாவதாக  தனி ஒரு குடும்பத்துக்கு மற்றும் குடும்ப
உபயோகத்திற்கு  அவசியமானவை  எவை என்பதுப்பற்றி அறிய முற்படு வோம்.

          (1)
குடும்ப உபயோகத்துக்கு சுமார் ஒரு ஏக்கர் நிலம்; அந்நிலத்தில் சுமார் அரை ஏக்கர் மிகாமல் ஒரு வசிப்பிடம் (அனைத்து வசதிகளுடன் கூடியது) (2) குடும்ப உறுப்பினர்கள் பதினெட்டு வயதைத் தாண்டிட்ட ஒவ்வொருக்கும் மனித நேயத்துடன் கல்வி ஆதாரத்தில் வேலை; (3) தேவைக்கேற்ற சம்பளம்; (4) குடும்ப உபயோகத்துக்கு இரண்டு கார்கள்; (5) உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பைக் மற்றும் சைக்கிள்கள் (6) ஒவ்வொரு குடும்பம்பத்தினருக்கும் மகளிர் உபயோகத்துக்கு மற்றும் பிற அவசரத் தேவைகட்கு ஒரு நூறு பவுன்களுக்கு மேற்படாமல் பிளாட்டினம் தங்கம் வெள்ளி நகைகள்; (7) கல்வி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புக்களில் (கல்வி துவக்கநிலை முதலாக) யார் எந்த அளவுக்கு கற்க விரும்புகின்றார்களோ படிப்புகாலம் முழுமைக்கும் படிப்புச் சார்ந்த செலவுகள் அனைத்தும்; மற்றும் ஆற்றல் ஆதாரங்களில் அனைவருக்கும் அரசு ஏற்பாட்டில் (வெளிநாடுகளில் உயர்படிப்பு உட்பட) இலவசம்; (8) எல்லோர்க்கும் அவ்வப்போது அல்லது எப்போதாவது அல்லது நிரந்தரமாக ஏற்படுகின்ற உடல்நலம் குறைவு (நோய்) எத்தகையதாக இருப்பினும் பாகுப்பாடு ஏதுமற்ற மருத்துவம்; மற்றும் அக்காலங்களில் உணவு உடை அறைகள்வசதி அரசு பொருப்பில் முற்றுமாக இலவசம்; (9) குடியிருப்புப் பகுதியிலிருந்து அவரவர் பணியிடங்களுக்கு பணியாளர்கட்கும்; அவ்வாறே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் சென்றுவர மாணவர்கட்கும் (கார்பயணம் தவிர்போருக்கு) பேருந்து மற்றும் ஊருந்து (ஆட்டோ) போகவரப் பயணம் இலவசம்; என்கின்ற திடதிட்டங்கள் மற்றும் கொள்கைகள் பேரில் ஒரு அரசானது செயற்படுமாறு அமையப் பெறுமானால்... இப்போது தெரிவியுங்கள்... மேற்கொண்டு அவசியமானதாக ஒவ்வொரு குடும்பத் துக்கும் வேறுஎன்ன வாழ்நாட்களில் இருக்கமுடியும்.

           8)
அந்தப்படிக்கு ஒரு குடும்பத்தினர் அடிப்படை அவசியங்களாவன:

1)       
சுமார் ஒரு ஏக்கர் நிலம்; அரை ஏக்கரில் ஒரு வசிப்பிடம்
          (அனைத்து வசதிகளுடனும் கூடியது)

2)       
குடும்ப உபயோகத்துக்கு இரண்டு கார்கள்;

3)      
உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பைக் மற்றும்
       சைக்கிள்கள்

4)      
குடும்ப மகளிர் உபயோகத்துக்காகவும் மற்றும் குடும்பத்தினர்
       அவசரத் தேவைகட்காகவும் ஒரு நூறு பவுன்களுக்கு    
         மேற்படாமல் பிளாட்டினம் தங்கம் வெள்ளி நகைகள்;
 

          --
என்று தனியாரது குடும்ப உபயோகத்துக்கு சொத்து உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்படலாம்.
 

          9)
மேற்குறிப்பிட்டவாறு சொத்துக்களை அனுபவிக்கும் எல்லை யானது அனைவருக்கும் பொதுவாக மற்றும் சமமாக ஒரு வரம்புக்குள் அடங்கிடும்போது பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மக்களிடையே தானாக மறையும்; போலி ஆர்ப்பாட்டங்களும் பொருளாதார வீணடிப்புக் களும் தேவையற்றது என்று மக்களே முடிவுசெய்திடும் நிலைமையும் எதிர்காலத்தில் உருவாகிடும் என்பது நிச்சயம்.

*
முழுக்கவிதையும் படிக்க

No comments:

Post a Comment