Friday, 18 April 2014

கடவுள் நம்பிக்கை வீணே!

ஆண்டவன் ஒருவனாகிலும்
இங்கே வருவானா?
இந்த சாலையை ஆய்வுச்செய்து,
பதில் தருவானா?

இந்த சாலையை,
அமைக்கும் முன்னே - மானுடம்;
கடவுள் வணக்கம் செய்திட்டதே!

இருந்தும் மரண ஊருக்கு...
செல்லும் சாலையோ?
இப்படி நடுவழியில்,
உடைந்திட்டதே!

நீர்நிலைமேல் பாலம் என்றால்
மானுட தவரென்போம்;
வேறு இயற்கை சீரழிவு
நிகழ்வு இன்றி...

இந்தச் சாலைப் பிளவுற்றதே
இது பறையும்,
ஆண்டவன் பிழை ஆமோ?

ஓர் சீருந்து மரண பிளவுள்
புதையுண்டதே!
கடவுள் நம்பிக்கை
வீணே!



Wednesday, 16 April 2014

 கவனி இனிநீ கவிதை அவனி!

கவனி இனிநீ கவிதை அவனி!
கவனம் கனிநீஎன்  கன்னி தமிழ்நீ!
புவனி மானுடப் பூநீ!

சொல்லச் சொல்ல இனிக்கும்,
அன்பு இலக்கணமே!
உன்னுள்...
செல்லச் செல்ல அணைக்கும்;
காதல் வனமே!

அள்ள அள்ள அவிழ்க்கும்...
ஆசை மலர்மனமே!
அகிலமொடு ஆகாயமும்
சுழற்ற சுழல, உடன்...
முயற்சியை மேற்கொள்;
 என் புவனமே!

நாளைய -
வில்ஸ் வேர்ட்ஸ் எம்,
ஒற்றுமை உலகம் - உன்
வலது கைவிரல் நுனியில்,
மலர்ந்து சுழலட்டும்!


-- Willswords M  Unity  world!
[http://willsinunityworld.blogspot.in]

Sunday, 6 April 2014

சிவனின் கதையெனவே உன்விளை  யாடல் கற்பனைகள் ...


பிரம்மன் கதையெனவே,
உன்காதல் கற்பனைகள்;
உச்சியைத்  தொடுவதற்கு,
மேலே மேலே பறந்தேன்!

பிரபஞ்சம் கடந்தும்,
உச்சத்தைக் காண்கிலேனே!
இரவெல்லாம் உறக்கம் இல்லாமல்,
ஏக்கத்தில் தவிக்கின்றேனே!

சிவனின் கதையெனவே,
உன்காதல் விளையாடல்;
அடிமடி முடிவு,
அறிந்திடாதபடி;
பிரபஞ்சம்,
தாண்டிப் பெரிதாக...

பெருமாள் கதையெனவே,
உன்னுள் புதைந்தேன் சென்றேன்;
உன்நினைவுகள்,
ஆழம்தரை அறிகிலேனே






சிவனின் கதையெனவே, உன்காதல் விளையாடல்...


சிவனின் கதையெனவே,
உன்காதல் விளையாடல்;
அடிமடி முடிவு,
அறிந்திடாதபடி;
பிரபஞ்சம்,
தாண்டிப் பெரிதாக...

பெருமாள் கதையெனவே,
உன்னுள் புதைந்தேன், சென்றேன்;
உன் அன்பு நினைவுகள்,
அளவு, ஆழம், தரை எல்லை!அறிகிலேனே!





Sunday, 30 March 2014

காற்று என்பது காதல்ஆயிற்று!



Photo: Vijay Television


காற்று என்பது காதல் ஆயிற்று!
அதனால் பூமியை மட்டுமே...
சுவாசிக்கின்றது!

வாழ்க்கை என்பது,
பூமி ஆயிற்று!
அது பூமியின் புரளலில்,
சூடு ஆயிற்று!

வானம் என்பது...
இவளின் பொறுமை  ஆயிற்று!
மேகமழை பொழிவில்,
குளிர்ச்சி ஆயிற்று!

இவள்... இறைவனின்,
ஒதுக்கல் அல்ல!
இயற்கையின் செதுக்கல்!

அறிவியல் அறிவே!

சிவன்நெற்றி கண்ணும்,
திகைக்கும்!
அவன்கதை அன்ன...
இவளின் திரிப்புரம்,
எழில்விழி நோக்கில்...

சிரிக்கும் முன்...
மறைப்பு ஏன்? மொழியேன்!
எரிப்புறம்...
எங்கென்று அணைப்பாய்?














Friday, 21 March 2014

விழாக்கொடிப் பூஅன்ன விண்ணில் சிரிக்கும்!


விழாக்கொடிப் பூஅன்ன விண்ணில் சிரிக்கும்;
நிலாஒளிப் போன்றே நினைவில் உலாவும்;
பலாவாய் பருக்கும் பருவச் சுளைகள்;
கழலாச்  சுவைசுழல்தேன்  காதல்!

Wednesday, 6 November 2013

பருவத்தில் பாயாகி, மெளனமாய் தாயாகி...


         
            Photo:  punita varma


Endurance is super star!
Than Our Solar!

So, what if?

While faces a fair flower looks,

Automatically melts!

         
[In Tamil]

பூவினும்* பெரிது பொறுமை!  

                             -  பொறுமையும்,
பூவையர்முன் நிற்க அகலும்!


*பூமியை விட

           இறைவனே இல்லைஎனும்,                                                                                      
           ஆதார ஆவணமாய்! 
கருவாகி உருவாகி, காலத்தில்  
       கவிதையாகி  [மழலையாகி]
மெருகாகி, கனியாகி,
       மெளனமாய்ப் பாயாகி,
பருவத்தில் தாயாகி,
        பழுத்த கிழமாகி...
சருகாகி [ஓர்நாளில்] சாக துயரம்தந்து 
        பிரிகின்றவள் பெண்!