Sunday, 30 March 2014

காற்று என்பது காதல்ஆயிற்று!



Photo: Vijay Television


காற்று என்பது காதல் ஆயிற்று!
அதனால் பூமியை மட்டுமே...
சுவாசிக்கின்றது!

வாழ்க்கை என்பது,
பூமி ஆயிற்று!
அது பூமியின் புரளலில்,
சூடு ஆயிற்று!

வானம் என்பது...
இவளின் பொறுமை  ஆயிற்று!
மேகமழை பொழிவில்,
குளிர்ச்சி ஆயிற்று!

இவள்... இறைவனின்,
ஒதுக்கல் அல்ல!
இயற்கையின் செதுக்கல்!

அறிவியல் அறிவே!

சிவன்நெற்றி கண்ணும்,
திகைக்கும்!
அவன்கதை அன்ன...
இவளின் திரிப்புரம்,
எழில்விழி நோக்கில்...

சிரிக்கும் முன்...
மறைப்பு ஏன்? மொழியேன்!
எரிப்புறம்...
எங்கென்று அணைப்பாய்?














No comments:

Post a Comment