Wednesday, 7 January 2015

இறைவா! நீ இருந்தால் கங்கையை இறங்கிவர செய்!


  Photo:  shreya bhatt


தைரியமே! உன்னைத் தரைமட்டமாக்கி,
பாபர் மசூதியே அன்ன...
இடித்து தகர்த்திட்ட...
கேடுமதி பூகம்பம் எது?

காவிரியின் கண்ணீரை,
தமிழர்கள் சுரண்டிச் சுவைக்க...
சாதி ஓநாய்களின்;
பேத கூத்துக்களால்...
அன்பு விவேகம் அன்ன,
வீரமும் எம்மை விலகிட்டதே!

திரிபுரத்தை நெற்றிக்கண் கொண்டு,

எரிதிட்டதாய் பறைவார்  சிவனே!
எம் முன்னே தோன்று!

எமது ஒற்றுமையைக் குற்றுயிராக்கி;
சுய  மரியாதையை சிதைத்திடும்;
வேற்றுமைப் பிறவிகளை,
உடன் எரித்து பொசுக்கு!

தூணைப் பிளந்து வெளி வந்திட்டதாய் 
புளுகிடுவார் பரந்தாமனே!
பல ஆயிரம் வருடங்களாய்...
நீ படுக்கையில், பாற் கடல் மேல்;
பள்ளி கொண்டிருக்கின்றாயாமே!

ஆழ்ந்த நித்திரையிலும் சோர்வு...
உன்னை விட்டு  ஒருநாளும்,
அகலாதோ?
இன்னும் எத்தனை ஆண்டுக் காலம்...
சுய உணர்வு அற்று இப்படியே...
படுத்தவாறு இருப்பாய்!                                                                           

இந்திய சினிமாக்கள்; இன்னும்,  
தினசரி வார மாதந்திர பத்திரிக்கைகள்;
பரப்பிடும் வதந்திகள்  ஒப்ப...

பேதம் ஒதிடுவோன் பறைகின்றவாறு,
நீ [உணர்வோடு], 
நிசமாய் இருந்தால்...

அதோ அங்கே, எமது காவிரியை...
முடக்கி சிறை செய்திட்ட,
கர்நாடகன் அணையைப் பிளந்து...

உம நரசிம்ம அவதார மிருக பலத்தை,
மக்கள் அனைவரும் நேரடியாய் 
காண காட்டு!

இந்திய துணைக் கண்டம் முழுவதும்,
ஒரே நாடு என்று ஆக்கு!    

மறைந்த மகாத்மா காந்தியின் மானுட,
மனோதத்துவ சிந்தனைப்படிக்கு...
ஒரு முஸ்லிம் மண்ணின் மைந்தனை;
பிரதமராக பிரகடனப் படுத்து!

காஸ்மீரம் யாருக்குச் சொந்தம்...
என்று தொடர்ந்திடும் சண்டைகட்கு,
காரணஅய்யன் முதலாம் அந்நியன்;
குறுக்கிடல்கள் விலகி, முடிவு கட்டு!


சிவன்சிரசு ஏகினாய் செப்புகின்றார் மண்ணுள்...
எவன்உன்னை ஏவினான்; இல்நீர் கவலையுள்யாம்!
சங்குடயோன் தங்கையே தாங்கட்டும் ஈசனை! நீ... 
கங்கையே காவிரிக்கு வா!

No comments:

Post a Comment