Friday, 9 January 2015

திங்களே! உன்னைப்போல் நானும்...


  Photo :  NDTV

எனக்காகநீ அன்று உன்னுள் உருகினாய்;
உனக்காக என்விழிகளுள்... 

ஒவ்வொரு நாளும் கண்ணீர் பெருகிற்று !

உன்னைச்  சேரும் உறவெண்ணி...
தினமும் தவிக்கின்றேன்! நெருப்பாய்;
தீய அன்றாடம் என்வாழ்வும் கருகிற்றே!


சாலை நடைபாதையில்
மானுடம் ஓரமாய் சென்றாலும்,
பாரம் சுமந்தவண்டி நடைபாதையிலும்...
புகுந்து கவிழ்வதுண்டு!


என்னைநீ விலகி...
வெகுதூரம் போனதினால்,
உன்னை நினைத்து தினம்;
பாதை மாறிட்ட வண்டிபோல்  ஆகிட்டேன்!

என்திங்களே! உன்னைஅன்ன  நானும்
ஏங்கித் தேய்கின்றேன்!
உன்னுள்நான் தங்கவே...
என்னுள் நான் சுழல்கின்றேன்!

ஒளி மங்கினால் உனக்கோ அமாவாசை!
என்வாழ்வுள் உடன் ஒளி தர வா!
மாதத்தில முப்பது நாளும் நான்...

துயர்இருட்டுள் புதையலாமோ?



No comments:

Post a Comment