BOLLYWOOD
Photo : aqsasuits Sayani
வாழைக் குலைகள்அசையும்
மலைஅடிவாரம் - ஒரு
ஓர்ஆல இலை அழகில்,
அமைந்திட்ட குளிர்ந்த புள்வெளி ஓரம்...
சோலைகளை அசைத்து மகிழும்
தென்றலை நித்தம் தழுவிட ஆடும் - மகளிர்
சேலைகள்போல் அலை அலையாய்...
இடையில் ஏங்கும் எழில்காவிரி எண்ணி;
வருமோ நதிநீர் வருமோ?
என்று கவலையுறும் தமிழகம் அன்ன...
குமரியைக் கங்கை கண்டு தழுவுதல்போல்;
வந்துஇப் பூவையை நீ வருடுகிறாய்!
கனவுள்தான் தினம் காண்கின்றேன்!
Photo : Jo Ann Neaves
'கோடை ' மேல் காற்றின் நாமம் ;
'கொண்டல்' கீழ் காற்றின் நாமம் ;
'வாடை 'வட' [திசை] காற்றின் நாமம் ;
'வடந்தை' , வாடை காற்று ஆகும்;
'சூரை ' சுழற் காற்றாகும்;
'சாரிகை' யும், சூறை யாகும் ;
'ஊதை' யோ, பனிக்கற்றாகும் ;
'கூதிர்' [உம்], 'ஊதை'யாகும் !
(காற்றின் மாறுபபட்ட பெயர்கள்)
வாதம், கால், வளி, மருத்து, வாடை, பவனம்,
வாயு, கூதிர், மாருதம், மால், கோதை, கொண்டல்,
உலவை, கோடை, ஊதை வங்கூழ், [சிறந்த]ஒலி,
சதாகதி, உயிர்ப்பு, [கா]அரி, கந்தவாகன்,
பிரபஞ்சனன், சலனன், காற்று - இவை யாவும்
[மொத்தம் 24] காற்றின் மாறுபபட்ட பெயர்கள் ஆம்.
ஆகாயத்தின் பல்வேறு பெயர்கள்:
அண்டம், வான், உலகு, மங்குல், அந்தரம், அம்பரம்,
கோ, குண்டலம், ககனம், காயம், குடிலம், புட்கரம்,
அநந்தம், [கண்டிடா] வெளி, மீ, மாகம், ஆசினி,
நபம், கம், விண்டலம், விசும்பு, வேணி, வியோமம்,
ஆகாயம் - இவை யாவும் [மொத்தம் 24] ஆகாயத்தின்
பல்வேறு பெயர்கள் ஆம்.
Photo : Murali,k Murali
சொத்துரிமை நடைமுறையால்,
சொந்தங்கள் சிதைந்து;
பற்றட்டுப் பிய்ந்து பலதேசம்...
புகுந்து உழைத்து உயர்ந்து...
ஒற்றுமைக்கு வழியறியாது;
காக்கும் கடவுள்என்று ஒருவன்...
புற்றுஎறும்பு அன்ன பறந்து;
வேற்றுமை எரும்புண்ணிகட்கு ...
மதப்புற்றால் ஆனான் விருந்து!
Photo : NDTV
எனக்காகநீ அன்று உன்னுள் உருகினாய்;
உனக்காக என்விழிகளுள்...
ஒவ்வொரு நாளும் கண்ணீர் பெருகிற்று !
உன்னைச் சேரும் உறவெண்ணி...
தினமும் தவிக்கின்றேன்! நெருப்பாய்;
தீய அன்றாடம் என்வாழ்வும் கருகிற்றே!
சாலை நடைபாதையில்
மானுடம் ஓரமாய் சென்றாலும்,
பாரம் சுமந்தவண்டி நடைபாதையிலும்...
புகுந்து கவிழ்வதுண்டு!
என்னைநீ விலகி...
வெகுதூரம் போனதினால்,
உன்னை நினைத்து தினம்;
பாதை மாறிட்ட வண்டிபோல் ஆகிட்டேன்!
என்திங்களே! உன்னைஅன்ன நானும்
ஏங்கித் தேய்கின்றேன்!
உன்னுள்நான் தங்கவே...
என்னுள் நான் சுழல்கின்றேன்!
ஒளி மங்கினால் உனக்கோ அமாவாசை!
என்வாழ்வுள் உடன் ஒளி தர வா!
மாதத்தில முப்பது நாளும் நான்...
துயர்இருட்டுள் புதையலாமோ?
Photo: shreya bhatt
தைரியமே! உன்னைத் தரைமட்டமாக்கி,
பாபர் மசூதியே அன்ன...
இடித்து தகர்த்திட்ட...
கேடுமதி பூகம்பம் எது?
காவிரியின் கண்ணீரை,
தமிழர்கள் சுரண்டிச் சுவைக்க...
சாதி ஓநாய்களின்;
பேத கூத்துக்களால்...
அன்பு விவேகம் அன்ன,
வீரமும் எம்மை விலகிட்டதே!
திரிபுரத்தை நெற்றிக்கண் கொண்டு,
எரிதிட்டதாய் பறைவார் சிவனே!
எம் முன்னே தோன்று!
எமது ஒற்றுமையைக் குற்றுயிராக்கி;
சுய மரியாதையை சிதைத்திடும்;
வேற்றுமைப் பிறவிகளை,
உடன் எரித்து பொசுக்கு!
தூணைப் பிளந்து வெளி வந்திட்டதாய்
புளுகிடுவார் பரந்தாமனே!
பல ஆயிரம் வருடங்களாய்...
நீ படுக்கையில், பாற் கடல் மேல்;
பள்ளி கொண்டிருக்கின்றாயாமே!
ஆழ்ந்த நித்திரையிலும் சோர்வு...
உன்னை விட்டு ஒருநாளும்,
அகலாதோ?
இன்னும் எத்தனை ஆண்டுக் காலம்...
சுய உணர்வு அற்று இப்படியே...
படுத்தவாறு இருப்பாய்!
இந்திய சினிமாக்கள்; இன்னும்,
தினசரி வார மாதந்திர பத்திரிக்கைகள்;
பரப்பிடும் வதந்திகள் ஒப்ப...
பேதம் ஒதிடுவோன் பறைகின்றவாறு,
நீ [உணர்வோடு],
நிசமாய் இருந்தால்...
அதோ அங்கே, எமது காவிரியை...
முடக்கி சிறை செய்திட்ட,
கர்நாடகன் அணையைப் பிளந்து...
உம நரசிம்ம அவதார மிருக பலத்தை,
மக்கள் அனைவரும் நேரடியாய்
காண காட்டு!
இந்திய துணைக் கண்டம் முழுவதும்,
ஒரே நாடு என்று ஆக்கு!
மறைந்த மகாத்மா காந்தியின் மானுட,
மனோதத்துவ சிந்தனைப்படிக்கு...
ஒரு முஸ்லிம் மண்ணின் மைந்தனை;
பிரதமராக பிரகடனப் படுத்து!
காஸ்மீரம் யாருக்குச் சொந்தம்...
என்று தொடர்ந்திடும் சண்டைகட்கு,
காரணஅய்யன் முதலாம் அந்நியன்;
குறுக்கிடல்கள் விலகி, முடிவு கட்டு!
சிவன்சிரசு ஏகினாய் செப்புகின்றார் மண்ணுள்...
எவன்உன்னை ஏவினான்; இல்நீர் கவலையுள்யாம்!
சங்குடயோன் தங்கையே தாங்கட்டும் ஈசனை! நீ...
கங்கையே காவிரிக்கு வா!