இளம் தளிர்களே!
புகைப் பிடிக்கும்
மயக்கத்தில்...
சல்லடைகளாவது,
உங்களின்
இருதயங்கள் மட்டுமா?
நீங்கள் வெளிவிடும்
கார்பண்டை ஆக்ஸைடுகள்
புவன உயிர்வாயு -
ஆக்ஸிசனையும், தீய...
பொசுக்குகின்றனவே!
பூமியைக் காத்திடும்
ஓசோன் படலமும்,
வீடுகளில் ஒளிர்ந்திடும்
குண்டு பல்புகளே போல்
வெப்பமய மாகின்றதே!
ஓசோனைத் துளைத்திடும்
கரியமிள வாயுக்களின்
சகோதர பீடிப் பிரியர்களே!
சிகரெட் சுவைஞர்களே!
நாட்டின் பொருளாதாரத்தை
பட்டாசு கொளுத்துவதுபோல்
நெருப்பிட்டு,
புகைய வைத்து,
சாம்பள்... ஆக்குகிறீர்களே!
காற்று மாசுபட
ஏனைய –
பூமி உயிர்கட்கும்,
கொள்ளி...
நீங்கள் வைக்கலாமோ?
|
புகையிலைக் காதலர்களே!
உயிர்கள் யாவும்
கடவுளின்
படைப்பென்கின்றீர்!
அவனே படைத்ததாய்
சொல்லும்
உங்களின் உடம்புகளை
நீங்களே...
கெடுத்துச் சிதைப்பதும்
பாவம் இல்லையா?
புகைத்திடா மாந்தரையும்
மரிக்கச் செய்யும் அதிகாரம்
உங்களுக்குத்
தந்தவன் எவன்?
பக்கத்தில் இருப்பவனையும்
பன்றிக் காய்ச்சல்
வந்துற்றது போல்...
இருமிடச் செய்கிறீர்களே!
புகைப்பதை உடன்
நிறுத்திடுங்கள்!
உங்களின் சுவாசப்புகைக்
கரியமிள வாயுவை
உள்ளிழுக்காமல்...
உம் சொந்தங்களும்,
சுற்றங்களும்...
தம் கொள்ளுப் பேரன்களை,
சிரிக்கும் எள்ளுக் குமரிகளை;
கொஞ்சி... பின், மரிக்கட்டும்!
உங்களின் வாழ்நாளும்
நம் முன்னோர் போல்,
வயது...
நூறுகளைத் தாண்டிடட்டும்!
***
|
Wednesday, 4 April 2012
ஓசோனைத் துளைத்திடும் பீடி, சிகரெட் சுவைஞர்களே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment