Thursday, 5 March 2015

இறைவா! ஏக்கம் இவளின் காதலனை கொன்றிட்டது!


   Photo :   Debra Simpson







இறைவாநீ இல்லவே இல்லை என்பதால்...
புழு ஒன்று புகுந்திட்டது! கண்டு
பூ ஒன்று அதிர்ந்திட்டது! கொடி
அழுகிக் கனிந்திட்டது! ஆசை
முழுவதுமாய் அழிந்திட்டது! விளைவு...


ஏக்கம் இவளின் காதலனைக்  கொன்றிட்டது!

கழுகு என்றுஓர் கல்யாணம் வந்திட்டது!
சந்தேகம் ஓர்ஆண்மகனை தின்றிட்டது!
காயாய் கருஒன்று உருஆயிற்று! மெதுவாய்
பழுதாகிக் கனிந்திட்டது! பதர் விதை
பாறை ஒன்றின்மேல் விழுந்து வெந்திட்டது!


தழும்பு நின்று கொதிநீர்அன்ன தவிக்கின்றது - தன்
காதலனை எண்ணிஆவியும் அன்ன துடிக்கின்றது!
விளைந்தும் விதைதரா கொடிஅன்ன சிலையாயிற்று!

உயிர்நிலை எங்கு சென்றிட்டது? என்று...
அருவியாய்  எண்ணங்கள் பரவி தேடுகின்றன!
கதையாகிட்ட  காதல்அன்ன பூமியுள்  
பனிமலை ஆகமாறி  உறைகின்றன!

Monday, 23 February 2015

நீ நலமாய் இருந்திட வேண்டும்! உன் நலம்மீது...


  Photo:   shahenai.com


 
அவன்:

நீ நலமாய் இருந்திட வேண்டும்! - உன்
நலம்மீது எந்நாளும் - நான்
சுகமே உணர்ந்திட வேண்டும்!

அவள்:

நீ பலமாய் இருந்திட வேண்டும் - உன்
ஆளுமை கீழே நான்மட்டும் நிழலாய்...
உன்னோடு இணைந்து இயங்கிட வேண்டும்!

அவன்:

நீ வளமாய் இருந்திட வேண்டும்! - காதல்
பூமி தளம் உன்னை நான்கண்டு சுழல கழலாமல்;
சுழற்றிடும் நிலவாய் எந்நாளும் சிரித்திட வேண்டும்!

இருவரும்::


அன்புக்களத்துள்  இணைந்து செயாலற்ற  வேண்டும்!
நமக்குள் ஒற்றுமையே உலகில் உயர்வானதென்று...
போடடியிடும் ஆசைகளில் இருவருமே ஒன்றி;
வெற்றி கண்டு வாழ்வில்  மகிழ்ந்து முன்னேற வேண்டும்!



Thursday, 12 February 2015

என்னைநீ ஊடுறுவிப் பார்த்ததுமே...


  Photo:  Found Pix


விரிக்கும் இதழ்களுள் வெளிப்படும்  தேனுள்;
தெரிக்கும் ஒளியில் திறக்கும் மலரில்;
சிரிக்கும்என்அழகில் தினமும் நிலவில்;
சரிக்கும் காதல் சரித்திரம் நீயே! 

என்னைநீ ஊடுறுவிப் பார்த்ததுமே;
உன்விழிகள் முழுவதுமாய் ஈர்த்திட்டன!
என்றன் நினைவுகள் ஆசை...
உணர்வுகளைக் கோர்த்திட்டன!

உன்னைப் பார்த்திட்டதுமே என் மனமோ...
கவிதை முத்துக்களாக சேகரித்து;
கற்பனை மாலை செய்து மகிழ்கின்றது!
துன்பமோ, இல்லை இன்பமோ, அன்பு?

உன்னை ஆய்வதற்கு தினம் வாடிடுது!
உன்றன்மனம் அறிவதற்குத் திண்டாடுது!
ஆப்பதனை அசைத்திட்ட குரங்கெனவே,
என்நிலைமை என்னைஉரு மாறிட்டது!

உன்னால் உறக்கம் என்னை கைவிட்டது!


Friday, 23 January 2015

ஓர்ஆல இலை அழகில், அமைந்திட்ட புள்வெளி ஓரம்...


BOLLYWOOD


     Photo : aqsasuits Sayani



வாழைக் குலைகள்அசையும்
மலைஅடிவாரம் - ஒரு
ஓர்ஆல இலை அழகில், 

அமைந்திட்ட குளிர்ந்த புள்வெளி ஓரம்...

சோலைகளை அசைத்து மகிழும்
தென்றலை நித்தம் தழுவிட ஆடும் - மகளிர்
சேலைகள்போல்  அலை அலையாய்...

இடையில் ஏங்கும் எழில்காவிரி எண்ணி;
வருமோ நதிநீர் வருமோ?
 என்று கவலையுறும் தமிழகம் அன்ன... 


குமரியைக் கங்கை கண்டு  தழுவுதல்போல்;
வந்துஇப்  பூவையை நீ வருடுகிறாய்!
கனவுள்தான்  தினம்  காண்கின்றேன்! 



அமிழ்தே! என்மூளையுள்நீ விளையாடாத போது...


   Photos : Taylor Swift Universe


  
செந்தமிழே! உன்னோடு உறவாடாத போது;
உயிர் வாழ்வேனோ! உன்றன்...
உமிழ்நீரை  தேனாக என்வாய் அணுகிடாத போது;
நாம் ஒன்றாவோம் எனும்நம்பிக்கை ஈடேறுமோ?


அமிழ்தே! என்மூளையுள்நீ விளையாடாத போது;
ஆறுதல் தேறுதல்என் இதயத்தை அணுகிடுமோ?


குமுதமே! என்இதழ்களும்  உனக்காக மணந்து...,
மதுச்சுரந்து விரிந்திடாத போது - என்றன்

மவுனம்தான் கலைந்திடுமோ?
என்னைநீ 

நிலவாக நேசித்துக் குவலயமாய், சுழல்வாயோ?



Thursday, 15 January 2015

காற்றின் மாறுபபட்ட பெயர்கள் !


   Photo :  Jo Ann Neaves


 
'கோடை ' மேல் காற்றின் நாமம் ; 
'கொண்டல்' கீழ் காற்றின் நாமம் ;
'வாடை 'வட' [திசை] காற்றின் நாமம் ;
'வடந்தை' , வாடை காற்று ஆகும்;
'சூரை '  சுழற்  காற்றாகும்;
'சாரிகை' யும், சூறை யாகும் ;
'ஊதை' யோ,  பனிக்கற்றாகும் ;
'கூதிர்' [உம்],  'ஊதை'யாகும் !

(காற்றின் மாறுபபட்ட பெயர்கள்)


வாதம், கால், வளி, மருத்து, வாடை, பவனம்,
வாயு, கூதிர், மாருதம், மால், கோதை, கொண்டல்,
உலவை, கோடை, ஊதை வங்கூழ், [சிறந்த]ஒலி,
சதாகதி, உயிர்ப்பு, [கா]அரி, கந்தவாகன்,
பிரபஞ்சனன், சலனன், காற்று - இவை யாவும் 
[மொத்தம் 24]  காற்றின் மாறுபபட்ட பெயர்கள் ஆம்.  

ஆகாயத்தின் பல்வேறு பெயர்கள்:

அண்டம், வான், உலகு, மங்குல், அந்தரம், அம்பரம், 
கோ, குண்டலம்,  ககனம், காயம், குடிலம், புட்கரம், 
அநந்தம், [கண்டிடா] வெளி, மீ, மாகம், ஆசினி,
நபம், கம், விண்டலம், விசும்பு, வேணி, வியோமம்,
ஆகாயம் -  இவை யாவும் [மொத்தம் 24] ஆகாயத்தின்
பல்வேறு பெயர்கள் ஆம்.





        

Tuesday, 13 January 2015

உழைத்தும் ஏன் ஆனான் விருந்து!


   Photo :  Murali,k Murali


சொத்துரிமை நடைமுறையால்,
சொந்தங்கள் சிதைந்து;
பற்றட்டுப்  பிய்ந்து பலதேசம்...

புகுந்து உழைத்து உயர்ந்து...
ஒற்றுமைக்கு வழியறியாது;
காக்கும் கடவுள்என்று ஒருவன்...

புற்றுஎறும்பு  அன்ன பறந்து;
வேற்றுமை எரும்புண்ணிகட்கு ...
மதப்புற்றால் ஆனான் விருந்து!