எத்தனை நாளிந்த கடற்கரையில் - அன்று
இதயம் மகிழ்ந்திருப்பேன்! - என்
அத்தை மகனென வந்தே அணைத்திடும்
நித்திரை கண்டிருப்பேன்!
நித்தமும் வந்திங்கே தீண்டக்கனவுள் - அவன்
நிழற்படம் எடுக்கையிலே - கண்கள்
பற்றக் கரங்களில் முத்தம் பதித்ததில் - நேரம்
சென்றது மறந்திருந்தேன்!
கண்ணகிப்
பெண்களாய்
தோழியர்
சூழ்ந்து
காற்றில்
உறைந்ததையும்
- சிலர்
உத்தமிகள்
பெற்ற
கோவலன்களாய்
கைகள்
கோத்துத்
திரிந்ததையும்...
சுட்டிப்
பையன்கள்
நெருங்கிச்
சுண்டல்கள்
பட்டாணி
விற்றதையும்
- அதைப்
பெற்றுண்டு
காதலர்
ஆங்காங்கே
சூழ்நிலை
மறந்து
தவித்ததையும்...
இக்கடற்
கரையில்
கண்ணுற்றதில்லை
நான்என்
சத்திய
உத்தமனால்
- தினம்
புத்தம்
புதிய'கள்'
போதைப்போல்
முயங்கிட்ட
நித்திரையின்
செயலால்!
புத்தன்என வந்து சொற்பொழி(வு) ஆற்றிடும்
அரசியல் காட்சிகளை - நான்
பக்தனைப் போல்சென்று பார்த்ததில்லை - அவற்றின்
பேதநிலை விளைவே!
அத்தை மகனென வித்தைகள் செய்திடும்
நித்திரையே வாழி! - அவர்
அன்புத் தங்கையேபோல் கண்ணுள்சிரித்திடும்
நிம்மதியே வாழி!
காதல் சிறப்புக் கவிதை > சொடுக்கு :
|
நாட்டு ஒற்றுமைக்கு
அறிக்கை/கவிதைகள்
சொடுக்கு
:
அறிவியல்
+
காதல்
கவிதைகள்:
சொடுக்கு
:
என் - இடதுபுறத்து இருதயமே! அறிவியல் சாந்த கவிதைகள்: சொடுக்கு : countries should be united... |
Thursday, 11 October 2012
கடற்கரை மணலில்... காற்றின் தழுவலில்...
Sunday, 7 October 2012
சிறந்த தலைமைப் பண்புகட்கு...
Thursday, 4 October 2012
என் அன்னையை இழந்ததிலிருந்து, நான் தொடர்ந்து கற்றது...
தீயாறு போன்றன்று தீண்டிட்ட காய்ச்சலினால்,
மூவாறு மாதமேஎன் முகம்பார்த்த அன்னையை,
காவாத கடவுள் எதற்கு?
செங்கோடன்
தந்தைத்
திருத்தியபேர்
மாணிக்கம்;
அன்று
மதம்மாறி
ஆண்டவரே
என்றிதயம்,
விம்மதினம்
செபித்தும்
வெடித்தநோய்
மாரடைப்பால்...
தும்மிடும்
நேரம்
தொலைந்தார்!
முப்பொழுதும்
உன்னை முருகா எனத்தான்என்
அப்பனின் அய்யன் அழைத்த அவர்வாயுள்
புற்றுநோய் வந்து புழுத்துஅதில்
செத்ததினால்,
கற்றேன் கடவுளில்லை
என்று!
ஆண்டவனே!
ஆண்டவனே!
ஆண்டவனே!
என்றில்லா
ஆண்டவனைப்
போற்றுகின்றீர்
அன்றாடம்; வேண்டவனை
அட்டை
எனப்பற்றி
அகிலம்
அதிசயிக்க,
முட்டையின்றி
கோழி
முளைக்க!
கோயில் களுள்பதுக்கும்
குப்பைஅன்ன செல்வங்களை
வா!எடு தெய்வம் மறுக்காது;
ஆய்.. அரசே!
வேலையில்லாத் திண்டாட்டம், வீடில்லா ஏழ்மைநிலை
ஆலைகள்காண்
ஆட்சிகளால் தீரும்!
Click: வகுப்புபேத ஒழிப்புக்கு (அறிக்கை)
Subscribe to:
Posts (Atom)
