- உன்னைநான் இறுக அணைக்கும் நாளில்!என்றன் மூக்கு சுவாசக் காற்றை - உன்இதயம் இசைந்து வாங்கும்; அப்போது - நம்காதல் நெகிழ்ந்து மகிழ்ந்து இயங்கும்!
உன்னுள் இணைந்து மகிழ்ந்த இதயம்-
என்னைநீ பிரிய சுருங்கி நொருங்க-இன்று
சுவாசம் சுருண்டு துவன்றது! முத்தமிடு;
உடலம் மீண்டும்என் உயிரை அடையும்!
உனக்குள்என்அன்பு ஒன்று மானால்--
கிறங்கும் கிளர்ச்சி மயக்கம் தெளியும்;
எனக்குள் தளர்நது தகர்ந்த உறக்கம்...
காதல் வளர... கிளர; செழிக்கும்!
No comments:
Post a Comment