Photos: Mustafa Naikodi
ஒற்றுமைப் பாய்ச்சலில் ஒரு குதிரை...
பாட்டாய் புலம்புகின்றது!
நானோ குதிரையினம்! இயல்பில் கழுதை யினம்!
பேதம், எமக்குள் இல்லையே! மானுடத்தில் [மிகச்சிறிய]
அந்த இனம் என்பதானது, அந்த இனன் என்றாகி;
அந்த இனன் என்பதானது, அந்த இணம் என்றாகி;
அந்த இணம் என்பதானது, அந்தணன் என்றாயிற்றே!
அதில் மனித நாகரிகம் அத்தனையும் இற்றுப் போயிற்றே!
பறை மனை ஆள் என்பதானது, பற மனை ஆள் என்றாகி;
பற மனை ஆள் என்பதானது, பர மனை ஆள் என்றாகி;
பர மனை ஆள் என்பதானது, பிர மனை ஆள் என்றாகி;
பிர மனை ஆள் என்பதானது, பிரா மணாள் என்றாயிற்றே!
இந்த இனம் என்பதானது, இந்த இனன் என்றாகி;
இந்த இனன் என்பதானது, இற்ற இனம் என்றாகி;
இந்த தொண்தமிழர் ஒற்றுமைப்போல்...
தந்தனத் தோம் என்றுப் பாடி - இன்று,
வழக்கில் எங்கும் இல்லாமல் பிட்டுப் போயிற்றே!
-- Willswords Tamil Twinkles
http://willsindiastamil.blogspot.com
Thursday, 30 May 2013
ஒற்றுமைப் பாய்ச்சலில் ஒரு குதிரை... பாட்டாய் புலம்புகின்றது!
Saturday, 25 May 2013
பேத மனநோயை மானுடம் விலக்காதவரை...
Anbu shivakumar
அரசியல் விட்டு மதங்கள் ஒழியாதவரை
அரசியல் சாக்கடை!
மதங்களை விலகி சாதிகள் அழியாதவரை
மதங்கள் சாக்கடை!
கடவுள் நம்பிக்கையை விலகி உழைப்போர் ஒன்றாதவரை
மானுடம் சாக்கடை!
பேத மனநோயை மானுடம் விலக்காதவரை
மனித மூளையே சாக்கடை!
-- Willswords Tamil Twinkles
http://willsindiastamil.blogspot.com
Friday, 24 May 2013
காதலில் சொக்கினேன்! கனவுகளுள் சிக்கினேன்!
Photos: Mustafa Naikodi
காதலில் சொக்கினேன்!
கனவுகளுள் சிக்கினேன்!
கவிதைகளில் முக்கினேன்!
நினைவுகளில் மக்கினேன்!
நிலவுப் பிறையாகினாள் - உன்றன்,
முகத்தில் நுதல்(நெற்றி) ஆகினாள்!
தாரகை வயலாகினாள் - முகில்,
தரணி முடியாகினாள்!
குன்று வனப்பாகினாள்,
குதிக்கும் மீனாகினாள்
குமரி முனையாகினாள்
குளிக்கும் கடலாகினாள்!
அன்பே!
பூமிக்கும் சூரியனுக்கும்
இடையே உள்ள தூரத்தை
'அஸ்ட்ரானமிக்கல்'
என்பதாக
அறிவியல் தெரிவிக்கின்றது!
நான் ஆதவனாகவும்,
நீ அகிலமாகவும்,
விலகி இருக்க...
நம் இருவரிடையே காணும்,
இந்தத் தொலைவுக்குப்
பெயர்... ?
நீயே தேர்வுச் செய்!
Thursday, 16 May 2013
புத்தனைப் பத்தாவது அவதாரமென... [வரலாற்றுச் சிதறல்!]
Photos: Vaidehi Chandran
வரலாற்றுச் சிதறல்!புத்தனைப் பத்தென* பொய்யுரைத்த பித்தர்கள்;
பித்தனை[சிவனை] விலக்கினர் பத்தினில்; கற்பனை,
எத்தனை எத்தனை இணைத்திட வாய்த்ததோ;
அத்தனைக்(கு) அத்தனை புனைந்துமே மக்களை,
பித்தர்கள் ஆக்கினர் பிரிவினையில்; அத்தொடு,புத்தனை புதைத்தனர்; நல்ல பெளத்தத்தை சிதைத்தனர்!*பத்தாவது அவதாரமென-- Willswords Tamil Twinkles
http://willsindiastamil.blogspot.com
Saturday, 11 May 2013
மற்றெதையும், சுற்றேன்என் தொண்தமிழே வாழ்த்து!
Photos: Ranjith Kuamr
வற்றாநோய் வெம்மை வறுத்தெடுக்க நக்கீரர்,
பொற்றா மரைக்குள் புகுந்தாராம் - முன்னோர்போல்,
கற்றால் நினைத்தான் கற்பேன்நான் மற்றெதையும்,
சுற்றேன்என் தொண்தமிழே வாழ்த்து!
முன்தோன்றி ஈசன்கை முத்தமிட்டு தன்பிறையைத்
தந்தாலும்; நாடளவு தங்கநகை ஈந்தாலும்;
வன்அரசு ஒன்றுசிறை வைத்தாலும் என்சிரசு,
தண்தமிழைத் தான்வணங் கும்!
சிறுவன்அச் சம்பந்தன் தீண்டி நகைக்க,
இருமுனையும் அன்னையாய்நீ ஈந்து முறுவளித்த(து)
உண்மையே என்றால் உமையவளே! கங்கையவள்...
தென்குமரி காணுமாறு செய்!
ஒரு ஞானியின் கனவு அரசாட்சியில்!
View:
Astronomy Picture of the Day (APoD)
2 hours agoPublic
Planetary Nebula NGC 2818
[Click > URL]
https://plus.google.com/u/0/app/basic/stream/
Astronomy Picture of the Day (APoD)
2 hours agoPublic
Planetary Nebula NGC 2818
[Click > URL]
https://plus.google.com/u/0/app/basic/stream/
Photos: Ranjith Kuamr
ஒரு ஞானியின் கனவு அரசாட்சியில்!
[காட்சி-1]
கோயில் உள்ள ஊரில்...
பொய்யுரைகள் விதைக்கப்படும்;
புராணங்கள முளைப்பிக்கப்படும்;
பேதங்கள் கிளைகள் விடும்;
மோதல்கள் செழிக்கும்;
வறுமை அரளிகளாய்ப் பூக்கும்;
பசிப் பட்டினிகள் காய்க்கும்;
மானுட அவமானச் சின்னங்களாக,
பிச்சை எடுப்போர் அதிகரிப்பர்!
அதனால் –
கோயில் இல்லா ஊரில்
குடியிருக்க வேண்டும்!
இது ஞானியின்...
கனவு-அடிப்படை ஆயிற்று!
தத்துவமும் ஆயிற்று!
[காட்சி-2]
அங்கு... கோயில்கள் ஏதுமில்லை!
ஆனால், மக்கள் குடியிருந்தார்கள்!
குருக்கள் என்று ஒருவரும் இல்லை!
பிணமே போல்...
யாரையும் எதையும்
பல்லக்குகளில் தூக்கிச் செல்ல,
அவசியமும் இல்லை!
பல்லக்குகள் பாடைகள் ஆயின!
அதனால் –
விழா ஆர்ப்பாட்டகள் இல்லை!
பொருளாதார விரையங்கள் இல்லை!
மதச் சண்டைகளை உருவாக்கிட,
ஆட்களும் இல்லை!
இறக்கும் நாளை நோக்கியே,
பிறந்தநாள் கொண்டாட்டங்கள் என்பதால்,
அந்த ஆடம்பரத்தின் வெளிப்பாடு...
விவேகமற்றது என்று தவிர்க்கப்படுகின்றன!
மனிதம் ஒற்றுமைக்காக வளர்ந்தது;
அமைதிப் பூ விரிந்தது!
[காட்சி-3]
கடவுள்கள்...
காட்டுமிராண்டிக் காலத்திய –
செத்துப்போன அரசர்கள் என்பது,
அறியப்பட்டது!
பேதங்கள் சாக்கடைகளாய்
அகற்றப்பட்டன!
மக்கள் அநேகமாக,
நோய்வாய்ப் படுவதில்லை!
எந்தவொரு பிணியும்,
மருத்துவத்தாலேயே...
குணமாக்கப்பட்டது!
அதனால் –
தெய்வம் என்பது
சில, தமிழ் சொற்களேபோல்,
புழக்த்தில்
இல்லாமல் போயிற்று!
[காட்சி-4]
ஆண்மை பெண்மை துணையின்றி,
அறிவியல் முதிர்ச்சியினால்,
மானுடத்தை மட்டுமல்ல...
எந்தவோர் உயிரையும்
செயற்கையாகவும் உருவாக்க
முடிகின்றது!
ஆனால் –
மனித நேயம் நோக்கில்,
அவ்விஞ்ஞான ஆய்வு
விளைவுகளை,
மருத்துவ ஆவணங்களில்,
மந்தனமாக (இரகசியமாக),
மற்றும்
ஆராய்ச்சிப் பெட்டகங்களில்
கரு... பாதுகாப்பாக,
வைக்கப்படுகின்றது.
எதற்காம் ...
இனியும் ஒருமுறை –
உலகம்,
நீரால் மூழ்கடிக்கப்படும்பட்சத்தில்...
கூர்ம(பன்றி) அவதாரங்கள் போன்று,
புராணக்கதைகளை நம்பியிராமல்...
அவறிவியல் அடிப்படையில்...
அகிலம் முன்னம், சூரியனிடமிருந்துப்
பிய்ந்த காலத்தில்
நிகழ்ந்தார்போல்...
மானுடமாக,
உயிர்ப்பிக்கப்படும்பொருட்டு...!
மேற்குறிப்பிட்ட, கரு... பாதுகாப்பு...
அன்றாட நிகழ்வு ஆயிற்று!
[காட்சி-5]
அதோ நமது சூரியன்
எரிந்து கருகிக் குறுகிச் சிதறி...
தூசி மணடலம்,
ஞாலத்தை மூடுகின்றது!
இதோ... மனிதனால் உருவாக்கப்பட்ட
ஓர் செயற்கைச் சூரிய வளாகம்...
பனி மழைத் துகல்களொடு,
குளிர்ந்துச் சுழல்கின்றது!
[காட்சி-6]
அட... இன்று மானுடம்வாழ்வது...
(கனவு காணும் நம் ஞானி உட்பட),
எரிமலைகளாய் சிதறிட்ட,
பூமியின் பழைய –
தூசிப்படலங்களைக் கொண்டு,
மனிதன் படைத்திட்ட –
அவனுடைய செயற்கை நிலவில்!
[காட்சி-7]
அய்யகோ...! இஃது என்ன?
ஆழமாய் நில அதிர்வு,
மீண்டும் ஓர் சுநாமி...
சப்பானில்,
மறுபடியும் துவங்கி...
அணுஉலைகள் ஆங்காங்கே கசிந்து...
உலமெங்கிலும் –
மக்களின் மரண ஓலம்!
ஞானியின்அற்புதக் கனவு...
மானுட ஒற்றுமையே போல்
கலைந்தது!
கடவுள் இல்லவே இல்லை...
நிரூபனமாயிற்று!
-- Willswords Tamil Twinkles
http://willsindiastamil.blogspot.com
Saturday, 4 May 2013
அறிவியலின் ஆக்கமும் அழிவும்!?
Photos: PrakasH MunnA
அறிவியலின் ஆக்கமும் அழிவும்!?
அண்டத்து தூசியெலாம் அன்றோர்நாள் அங்குமிங்கும்...
குண்டுகுண்டாய் மோத குவிந்த அணுத்திரள்கள்,
திண்டுதிண்டாய் சீற தெரித்த கதிரவனுள்,
பிண்டுப் பிரிந்ததேநம் பூமி!
அண்டம் விட்டு அண்டம் ஆயும்,
அறிவியல்... ஒர்நாள் –
கண்டம் விட்டு கண்டம் பாயும்?
அகிலம் கருகி... சாம்பலாகும்!
மானுடம் பிழைக்க –
பயிர் வயல்கள்,
செடி கொடிகள்...
பூத்துப் புன்னகைக்கின்றன!
ஆனால் –
பூச்சிக்கொல்லி மருந்துகளால்,
தானியங்கள், காய்கள், கனிகள்;
நஞ்சுகளாகின்றன!
அதனால்...
அறிவியல் ஒரு
அரியும் வெங்காயம்!
மருந்தும் ஆகின்றது!
எரிச்சலும் தருகின்றது!
அறிவியல்...
சூரிய மண்டலம்கடந்து...
சுழலவும் செய்கின்றது!
பால்வெளி வீதிக்குள்நுழைந்து...
பயணமும் தொடர்கின்றது!
அதனால்...
உலகம் சுருங்குகின்றது!
பிற கிரகங்களின்
இரகசியங்களைத்
தெரியவும் உதவுகின்றது!
ஆனால்...
அழிவைச் செய்திடும்
கலகக் காரர்களுக்கு–
வேட்டைநாயும் ஆகின்றது!
அறிவியல் இரவுகளில் …
ஒளிக் கற்றைகளாகி
அகிலத்துக்குள்
இருட்டைக் களைகின்றது!
உலகோர் தேவைகளை...
ஆலைகளாகிப்
பூர்த்தி செய்கின்றது!
ஆனால்...
ஓசோன் படலத்தை
ஓட்டை ஆக்குகின்றது!
சூரியனின்
புற ஊதாக் கதிர்களை
உட்புக வைத்து...
பூமிச் சோலைகளின்–
பரப்புக்களைச் சுருக்கி,
பாலைவனங்களாய்...
மா[ற்]றவும் செய்கின்றது!
அறிவியல்...
அற்புத கணனிகளாகி,
இயந்திர மானுடமாகி,
விந்தைகளைப் புரிகின்றது!
ஆனால்... இன்றைய
இளைய சமுதாயத்தினரை,
கல்வி முடித்தும் –
வேலையில்லா...
பட்டதாரிகளாக்குகின்றது!
புவனத்தை –
போர்களங்கள்,
ஆக்குகின்றது!
பருவ வயதினர்...
கைச் செல்போன்களாகி,
குடும்பத் தந்தையரின் வருமானம் –
சேமிப்புக்குள் உயரவிடாமல்...
உதிரம் கசிய...
உழைப்போர்
வியர்வைத் துளிகளே போல்...
உலக பொருளாதாரத்தை
தினசரி –
விரயம் செய்கின்றது!
இதனால்...
ஒரு பெண் [வேலையில்லா பட்டதாரி!]
கவிதை எழுதுகிறார்...?
*வளர்ச்சி உண்டு! ஆற்றல் உண்டு !
வனப்பும் உண்டு!
ஆனால்...
மணமே இல்லை!
இந்த,
செல்போன் கொடி மலரே போல்...
அறிவியல் பூவும்,
முதிர் கன்னி!
குறிப்பு:
* இக்குறியிட்டது, சென்னை வானொலி
மூலமாக 11.12.2004-அன்று ஒலிபரப்புச்
செய்யப்பட்டது.
[கவிதைத் தலைப்பு, வானொலியினுடையது]
-- Willswords Tamil Twinkles
[http://willsindiastamil.blogspot.com]
Subscribe to:
Posts (Atom)