Tuesday 27 March 2012

கதிரவன் எரிந்து மறையும் நாளில்…!

 
 Thanks :     Dinakaran  for published through  the
                      Tamil Daily E-Mail News, 31.3.2012

 

கதிரவன்  எரிந்து,
கருகிச் சுருங்கி,
மறையும் நாளில்,
மதியொளி இழக்கும்!

தூசிப் படலம்,
வானில் பரவும்;
இரவும் பகலும்,
இல்லா(து) இருளும்!

கடலலை நிற்கும்;
கடுங்குளிர் பிறக்கும்;
பூமிப் பரப்பை,
பெரும்பனி மூடும்!

பனிப்பொடி உள்ளே,          
மானுடம் உறையும்;
கனிக்கொடி செடிமரம்,                   
கருகிப் புதையும்!

கற்களில் செதுக்கிய,
கலை ஆலையங்கள்,
உலோகச் சிலைகள்...
சிதையா(து) மிழும்!


















வேறொரு கிரக

மானுடம் அனுப்பிய
பறக்கும் தட்டு
பூமியைச் சுற்றும்!

புவனம் முழுமையும்,
புகைப்படம் எடுக்கும்;
அவனி மண்ணை,
ஆய்வும் செய்யும்!

உயிர்கள் வாழும்...
பதத்தில் அகிலம்,
துயில்வதை உணர்ந்து,
உள்ளம் உவந்து!

செத்த ஆதவனை,
ஆய்வறி வாலே,   
உயிர்பெறச் செய்யும்
ஒளிவெப்பம் தெரிக்கும்!
பார்-எங்கும் படிந்த,
பனித்தளம் உருகும்;
கொடிசெடி மரங்கள்,
மெதுவாய் தளிரும்!


              மானுடம் மீண்டும்... 
              பலமதம் படைத்து,
              மொழிஇனம் பிரித்து,
              மோதல்கள் செய்து,
              மடிந்திட உயிர்க்கும்!  


!  


   


No comments:

Post a Comment