Thursday, 30 October 2014

மூடாதபனி ஆற்றுக்குள் நீந்திநீ விளையாட...

 
   Photo :  Ishitha Iyer



அவன்:

ஆடாத காற்றுக்குள் புகுந்து அசைந்தேன்!

அறியாத இறைஎன்று உனக்குத் தெரிந்தேன்!

மேடான உன்படையலுக்குள்பசி மறந்தேன்!

ஈடேது இணைஇவளுக்கு என்று

உன்னோடு இணைந்தேன்!


அவள்:

நீவாட காட்டுக்குள்,

தேடாமல் தேனெடுக்க இசைந்தேன்!

சூடானஉன் கவிதைகளுக்குள்

சுகமாகச் சுழன்றேன்!

மூடாதபனி ஆற்றுக்குள்

நீந்திநீ விளையாட...

ஊடாமல் அனுமதித்தேன் எனக்குநீ...

சந்தனம் தடவ மணந்தேன்!

 

Tuesday, 28 October 2014

உன்னை நான் தவற விட்டேன்!



உன்னை நான்  தவற விட்டேன்!
என்னை நான் குமுற விட்டேன்!
உணர்வுகளை மடிய விட்டேன்!
உயிரை முடிய விட்டேன்!
உண்மை துறவி ஆகி விட்டேன்!

கண்ணை மூடி  இருள விட்டேன்!
பிறந்தது எனக்கு தெரிய வில்லை!
இறந்தது நினைவில் இல்லை!
எங்கே என்றன் உயிர்மூச்சு?

உன்னைத் தொட்டு உணர...
எங்கே அவன்? இறைவனும் இல்லை!