Photo: muralidhar nayak
பகலென்னும் மணநேரம்...
பலர்போற்ற முடிந்துற்றதும்;
இருட்டுஎனும் முதலிரவு வந்துற்றது!
வானென்னும் வடிவில்ஓர் ஆணழகன்.
புதுப்பெண்னை - மழைத்பெண்னென்னும் பேரழகிப் பூமிப்
தூரல்அன்ன தன்கரத்தால்,
தொடுகையிலே, அந்நேரம்...
நிலவென்னும் நிலப்பெண் தோழி!
சிரிப்பென்னும் முத்துக்களை,
அங்கே தூவி விட, ஒளிச் சிதர...
விண்ணழகன் வெட்கி - மழைத்
துகல்எனும் விரலை விலக்க - உடன்
நிலவென்னும் சிறுமிதன்
தவறறிந்து; நிலையுணர்ந்து.
மேகமென்னும் திரைக்குள் மெல்லப்
புகுந்து மறைந்தாளம்மா!
முகிலென்னும் திரையின்உள்
முறுவல் ஒளிஅழகி மறைந்தவுடன்,
காதலென்னும் முதலிரவு,
கனவு விலகி தொடர்ந்ததம்மா!
வானழகன் மழைப்பொழிவைத் தொடர,
எழுதுகோல் என்னும் தென்றல்தன்...
சுய சரிதையை எழுதிட 'முரலிதர்நாயக்'
தோட்டத்துள் புகுந்து - இயற்கை
காட்சிகளை ரசித்தபடி நகர்ந்ததம்மா!
Thursday, 24 October 2013
முகிலென்னும் திரையின்உள் நிலவென்னும் சிறுமி...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment