Thursday, 24 October 2013

அய்யகோ! நாணும் அணங்கே! உன்றன் காவிய நடனம்முன்...

    [Photos: Indian Mirror Magazine]


 
 
நிமிர்ந்த நடை நிறைவுறா
      
அரைமறை(வு) உடை!
வளர்ந்த இடைமேல் மழைக்கால
      
மடங்காக் குடைகள்!
அண்டை வாஎன அழைக்கும்
      
அழகுப்போர் படைகள்!
சண்டைக்கு இழுக்கும் சாகசவிழி
   வில்கள்; பார்வைஅம்பு;
அய்யகோ! நாணும் அணங்கே!
      
என்னைவிடுநீயோ...
பொய்கையில் அசைந்தாடும்
      
புதுகனிக் கொடி மொட்டு!
உன்றன் காவிய நடனம்முன் நான்
      
சின்னஞ்சிறு கவிதைச் சிட்டு!
இன்று என்றன் தவநினைவு தடுமாறிடுதே
!

முகிலென்னும் திரையின்உள் நிலவென்னும் சிறுமி...


 
  Photo: muralidhar nayak

பகலென்னும் மணநேரம்...
பலர்போற்ற முடிந்துற்றதும்;
இருட்டுஎனும் முதலிரவு வந்துற்றது!

வானென்னும் வடிவில்ஓர் ஆணழகன்.

பெண்னென்னும் பேரழகிப் பூமிப்
புதுப்பெண்னை - மழைத்
தூரல்அன்ன தன்கரத்தால்,
தொடுகையிலே, அந்நேரம்...

நிலவென்னும் நிலப்பெண் தோழி!
சிரிப்பென்னும் முத்துக்களை,
அங்கே தூவி விட, ஒளிச் சிதர...
விண்ணழகன் வெட்கி - மழைத்
துகல்எனும் விரலை விலக்க - உடன்

நிலவென்னும் சிறுமிதன்
தவறறிந்து;  நிலையுணர்ந்து.
மேகமென்னும் திரைக்குள் மெல்லப்
புகுந்து மறைந்தாளம்மா!

முகிலென்னும் திரையின்உள்
முறுவல் ஒளிஅழகி மறைந்தவுடன்,
காதலென்னும் முதலிரவு,
கனவு விலகி தொடர்ந்ததம்மா!

வானழகன் மழைப்பொழிவைத் தொடர,
எழுதுகோல் என்னும் தென்றல்தன்...
சுய சரிதையை எழுதிட 'முரலிதர்நாயக்'
தோட்டத்துள் புகுந்து - இயற்கை
காட்சிகளை ரசித்தபடி நகர்ந்ததம்மா!


Monday, 7 October 2013

எப்போதும் விடியாதோ என்று... [Via thy eyes' fresh looks!]


yeshash m.c.'s profile photo  yeshash m.c.


Via thy eyes' fresh looks,
     you throw much incurable sickness;
     through dreams and at my brain!
If I express as, me too love you!
At once by your lips hooks,
You will lock my heart!
Meanwhile I will meet certainly death!
I’m as child; allow me to breathe please!



[In Tamil]

எப்போது விடியும் என்று உறங்கிடாது,
இரவுகளில் தத்தளிக்கும் கிழமே போல்...
எப்போதும் விடியாதோ என்று - இமை
துஞ்சாது ஏங்கும் என் பாசப் பழமே!
இப்போது தப்பவிடு கனவிலும் தோன்றாதே!
என்னை  ஓர் விவரமறியா  மழலையாக!
எண்ணு என்றன்உயிர் பிழைக்கட்டும்!

Sunday, 6 October 2013

ஆழ்கடல் ஆழம் அறிதல் பெரிதல்ல! [Not easy to trace out a girl's brain!]


The X Factor USA


Knowing depth of sea is never tough one!
But not easy trying to trace out,
The hidden passions of a girl's brain!


[In Tamil]

ஆழ்கடல் ஆழம் அறிதல் பெரிதல்ல [ஆசைகளை]
தாழிடும் பெண்மூளை தான்!

காவி வேட்டி கட்டிக் கொண்டு... [Show large loving on your wife!]



                       Firstpost
                   
Show large loving, to your parents;
As such wishes on your wife;
Learn good characters,
For children and country;

     Aim to remove...
     The difference among nations;
     Plan your thoughts, for uniting people;

And grant you yourself,
For Mother Tongue’s growing!



[In Tamil]

காவி வேட்டி கட்டிக் கொண்டு
கணேச அய்யர்,
முழக்கம் எழுப்பினார்!
போராடும் ஊழியருக்கு,,,
சாதியில்லை மதமும் இல்லை!
இதுதாம்மா யதார்த்தம்!

Saturday, 5 October 2013

மிரளாதே மானே! மிரள முடங்கிடுமோ? [True love, Never be as Second World war!]




The X Factor USA's profile photo  The X Factor USA


Oh! My frightened dear!
Don't daunt!
Problems could be removed!

Because passions of true love,
Never be as past cruel Second World war!

[In Tamil]


மிரளாதே மானே! மிரள முடங்கிடுமோ?
அரவாய் படமெடுக்கும் ஆசை!