முகத்தில்தோற் பட்டையிலும் தொடைப்பாதம் மூலமும்
சகத்துள் உடலுறவின்றி சனனித்தாய் சாதிப் பித்துள்,
மகிழும் மனநோயே! பெண்ஆண் கருஅணு இணையஅந்
நிகழ்வால்தான் நீயும்நானும் குழவிகளானோம்! பிறவித்தளம்வழி
அகழ்க ஆய்க… பிறப்பால் மானுடமானோம் பிரிக்காதே? ஒன்று!
அதனால்...
ஊழல் ஒழிகஎன ஓதும் மதவெறியே!
ஆளலுக்கு நேர்மை? அருகதையே! – ஈழமென சாதியை முன்நிறுத்திச் சாதிக்க விழையாதே!
சாதியும் ஊழலெனச் சாற்று!
பலாவைப் பிளந்து பகைசூழ் ஒதுக்கி அழாச்சுளை உண்ணும் அறிவே! - நிலாவென பேதம்பிள சாதிவிழ பேதமை போக்குசம நீதிகாண் நேர்மை அது!
அறிவியல் சார்ந்த கவிதைகள்:
சொடுக்கு :
|
No comments:
Post a Comment