வகுப்புபேதஒழிப்புக்கு, தொழில்வாரிஇடஒதுக்கீடு! [Part-I]
இந்தியாவில், மாநிலங்கள் மொத்தம் 28; மற்றும்தலைநகரம் டெல்லி சேர்த்து Union Territories (7) - என்று தற்போது நிலப்பரப்புக்கள் உள்ளன. இவையாவும் மொழி வாரி மாநிலங்கள் என்கின்ற ஆதாரங்களில் அரசுகள் செயற் படுகின்றன. என்றாலும் தாம் பேசுகின்ற தாய்மொழி அடிப்படையிலும் கூட மக்கள் ஒன்றுப் படவில்லை. இந் நிலவரத்தால் வகுப்புபேத வாதமும் மோதல்களும் முற்றுப் பெற்றிடவில்லை. அதனால் யாவரும் இந்தியர் என்கின்ற சூழுரையானது மக்கள் நெஞ்சங்களில் வேரூன்ற வேண்டும் என்கின்ற நல்ல எண்ணத்தின்பால் நாம் நமது கருத்துக்களை வகுப்புபேதங்கள் ஒழிப்புக்கு முடிவு எதுவென்பதை அறியப்பட மக்கள் மற்றும் அரசுகளின் ஆய்வுக்காக வெளியிடுகின்றோம்.
2) அந்தப்படிக்கு முடிவு அடிப்படையில், தற்போதுள்ள மொழிவாரி மாநிலங்கள் என்கின்ற நடைமுறைகட்கு மாற்று ஏற்பாடாக, முதற்கட்டமாக இந்திய துணைக் கண்டத்திற்க்குள் [5] மாநிலங்கள் மட்டும் (வகுப்பு வாரியாகவும்), மற்றும் தனித்தனியே மொழி + வகுப்புவாரி மாவட்டங்களாக மொத்தம் [145] (இவற்றுக்கு இணை மாநிலங்கள் என்று பெயரிடலாம்) என்றும் உருவாக, இந்திய அரசமைப்புச் சாசனம் விலகாது, சாசன சரத்துக்களிலிருந்து முரண்படாமலும் வழிமுறைகளை கண்டு முறையே நடை முறைப்படுத்திட முனைவோம். (இப்புதிய செயல் முறைகளால் மக்களில் எப் பகுதியினரும் தற்போது உள்ளவாறு விரும்பினால் மட்டும் இடம்பெயரலாம் என்கின்ற உரிமைகளிலோ மேலும் இந்தியாவில் எங்கேயும் எவரும் வசிக்கலாம் அல்லது குடியேறலாம் என்பதிலோ மாற்றம் ஏதும் இல்லை).
3) அந்தப்படிக்கு புதிய நடைமுறையை அமுல் படுத்திட்ட சாதனையில், அடுத்துவரும் தலைமுறையினரின் எண்ணங்களில் இந்தியர் என்கின்ற உணர்வு மட்டுமே எஞ்சிடும் என்றும்; வகுப்புப்பேத பாகுப் பாடுகளும் மற்றும் மோதல்களும் மெல்ல மெல்ல மறையும் என்பதையும் ஐயமின்றி நம்பிடுவோம். அதன் பின்னர் நமது எதிர்கால வாரிசுகள் சாதிகள் என்றால் என்னவென்று கேட்கின்ற நல்லதொரு நிலைமையில் இந்தியராய், ஒரே மக்கள் என்கின்ற நேர்மையான உணர்வுகளுடன் மனத்தால் அனைவரும் ஒன்றுவார்கள் என்பதையும் நமது புதிய கருத்துக்களை முறையே ஆய்வுச் செய்கையில் தெரிய வரும்.
4) அந்தப்படிக்கு சாத்தியமான விவரங்களில் முன்னதாக தெளிவுப் பெற முற்படுவோம்.
i) இந்திய துணைக்கண்டத்தில் மொழி ஏதும் சாராது,
வகுப்புவாரியாக மாநிலங்கள்... (ஐந்துபோதும்)
ii) தனித்தனியே மொழிச்சார்ந்த + வகுப்புவாரியாக
மாவட்டங்கள் (இவற்றுக்கு இணைமாநிலங்கள்
என்று பெயரிடலாம்) அதாவது மொழி + வகுப்பு
வாரியாக, இணைமாநிலங்கள் மொத்தம் ( 29 x 5)
அடையப் பெறுவோம்.
5) அடுத்துவரும் எடுத்துக்காட்டில்விவரித்தபடி, மொழி + வகுப்பு வாரியாக ஒவ்வொரு மொழிச் சார்பாகவும்[5] இணை மாநிலங்கள்.
எடுத்துக் காட்டாக,
(தமிழ்மொழி அடிப்படையில்) –
i) தமிழ் SC இணை மாநிலம்
ii) தமிழ் மலைவாழ் மக்கள் (ST) இணை மாநிலம்
iii) தமிழ் BC இணை மாநிலம்
iv) தமிழ் MBC இணை மாநிலம்
v) தமிழ் FC இணை மாநிலம்
|