Saturday, 9 April 2016

படைத்தோன் யார்? பொய்க்கு, போலிகட்கு விளம்பரம் எதற்கு?


ஆழியுள் மூழ்கி அகிலத்தை மீட்டாயாம்;
பாலுள் முயங்கும் பரந்தாமா! ஒவ்வொரு
நாளும் உலகில் நடந்துறும் சண்டைஎவ்
வேளையும் வேண்டாமே... வா!கா!

படைத்தோர் யார்? படைப்பவர் யார்? என்றால்; 
கடமைஎன அனைவர்கும் காய்கனி தானியம் ; 
படைப்பதற்கு ஏர்உழுதும் அழுகின்ற விவசாயி!
உடல்கருகி உழைத்து மடிகின்ற தொழிலாளி! 

ஆண்டவன் உண்டேன்பதாக ஆராயாது நம்பி 
அறிவியலை நிராகரிக்கின்ற அறிவே! உன்உரு 
ஆக்கிட்டோர் இருவர்; தகப்பனும் தாயுமே!  
ஆயினும்நீ ஆராதிப்பதுஎது? கடவுள் சூன்யமே! 

அற்பமே! ஓர்நாள் உன்னுடல் உயிரை விலக்கி... 
அப்புறப் படுத்திடுவதோ காலமே; என்றறிவாய்! 
குப்புறப் படுத்துநீ வணங்கும் நம்பிக்கை விலகு! 
கற்பனை பொய்க்கு விளம்பரம் எதற்கு?


Saturday, 6 February 2016

சிவனாக ஆகி வா! அய்யன் கதைப்படி என்​​னை கற்பழி!

 
   Art photos:  Mermaids Page  




நான்ஓது  வோன் செப்பும் கடவுளின் மோகினி-

அவதாரமாம்! நீஇறைவன் சிவபெரு மானாம்!

தேகஅழகு என்னுடையது ஈர்த்திடுகிறதாம்!

காமவெறி உனக்கு தலையில் ஏறிடுகிறதாம்!

காதைப்படி கற்பழிக்க துரத்திடு வாயாம்!



ஒருநாளும் ஆணாக-நான் ஆகிட மாட்டேன்!

கருவாக்கும் உன்அதை  ஏன்அன்னியனின்-

மோகினி கன்னிபோல் கைதளத்தால் பற்றிஉன்-

தேகத்தின் தேக்குஆசையை வீணாக்க வேண்டும்!

கைகொண்டு புதிய உருவத்தைப் பிரசவிக்கவோ?



ஓதுவோன் கற்பனை கைகதை​பொய் அய்யப்பன்

தேவைஎனக்கு இல்லை! உயிர்முட்டை உற்ப்பத்தி-

மையத்தின் அழகுகருப்பை பைய்யப்ப னைத்தான்

வையகத் தில்உன் மூலம்நான் படைத்திடனும்!

வாவந்து கடவுளாகி துரத்து! கதைப்படி கற்பழி!




Wednesday, 23 December 2015

பந்தத்தில் பணம் பண்ணும் சாதிக்குள்...

Embedded image permalink 


Photo:  35m



உன் சுவாசத்தோடு நீந்திட்ட தால்காதல்
காற்றுள் கரைந்துற்ற​​தோ?
உருகுகின்றேன் ன் வசம்;
தேடிட்டேன் என்உயிர் சகவாசம்! உன்றன்-
இதயத்தில் செய்கின்றது வாசம்!

காற்றுள்ளே நேற்றுநீ செய்திட்ட சுவாசம்;
காலமெல்லாம் இதயத்துள் பேசும்!
உன் இதழ்கள்வழி அனுப்பிட்ட தூது...
என்உச்சந் தலைக்குள் நுழைந்து-
இன்று மூளைக்கு தருகின்றது வேது!

சொந்தத்தில் பெண்ணடிமை எங்​கே இல்லை!
பந்தத்தில் பணம் பண்ணும் சாதிக்குள்... 
அன்பு, எவரிடத்தும் காதல் ஆதாரத்தில் இல்லை!
உன்னைநான் பார்த்திட்ட நாள் முதலாய் - என்
மண்டைக்குள் மூளை கட்டுப்பாட்டில்இல்லை!

Wednesday, 11 November 2015

உன்னால் எனக்கு காத​லே... வாழ்கை ஆயிற்று!

 
   Photo:   Kevin Howard


உ ன் னா ல் தா ன்  மா றி னே ன்
உ ற வா க  ஆ கி னே ன்!

உன்னிலிருந்து
       காதல் விதைப்பெற்றேன்!
உன்னிலிருந்து
       கற்பனைக் கொடிவளர்த்தேன்!
உன்னிலிருந்து கவிதை -
       மகரந்தங்களை தூவிவிட்​டேன்!
உன்னிலிருந்து கனிகள்மணங்களை
       காற்றில் உதிர்த்திட்டேன்!

என்னால் நான்உன்
       துணையை விலகிட்டேன்!
என்னால்நான் குடும்பத்தைத்
       தொலைத்துவிட்டேன்!
என்னால் என்றன் -
       உறக்கம் மறித்திட்டது
என்றன்உயிரை
       நம்காதல் காப்பாற்று கின்றது!

உன்னால் என்றன்
       சிந்தனை முளைவிட்டது!
உன்னால் என்றன்
       கற்பனைகள் விரிந்திட்டன!
உன்னால் என்னுள்
       காவிய கவிதைகள் மணக்கின்றன!
உன்னால் எனக்கு
       காத​லே வாழ்கை ஆயிற்று!

Monday, 2 November 2015

டாஸ்மாக்குக்கு எதிராக பாடல்!

 
    தகவலும் பு​கைப்படமும்:    Prakash JP


நாறிடும் கூவம் ஆறுஉன் -
       நாக்குவிரும்பிடும் மதுச்சாறு!

போரிடும் அறிவுப் புலன்களும்,
       உடலும்கெட... மதிமயக்கி;

தேரேறும்! ​மதநோய் பரப்பும்
       சாதிகிருமிகள் ​தெரு​தெரு புழுக்க...

சோருதல் அளித்து, படிப்பவனை...
        பள்ளிவிலக தூண்டும்!


சேறினுள் சிக்கிட்ட விளங்கா படகு;  

        மதுவிற்கும் அரசு!  போதை...

தூறுகளுள் ஆதாயம் நாட... ஆக, 
        துயருறும் மக்களை;

சாராய இனஆளுகையி லிருந்து   
        மீட்க பாடிட்டது  தவறோ?

மீறினராமே  சட்டம்!  கோவனும்...
        சிறையுள் எதற்கு?