தகவலும் புகைப்படமும்: Prakash JP
நாறிடும் கூவம் ஆறுஉன் -
நாக்குவிரும்பிடும் மதுச்சாறு!
போரிடும் அறிவுப் புலன்களும்,
உடலும்கெட... மதிமயக்கி;
தேரேறும்! மதநோய் பரப்பும்
சாதிகிருமிகள் தெருதெரு புழுக்க...
சோருதல் அளித்து, படிப்பவனை...
பள்ளிவிலக தூண்டும்!
சேறினுள் சிக்கிட்ட விளங்கா படகு;
மதுவிற்கும் அரசு! போதை...
தூறுகளுள் ஆதாயம் நாட... ஆக,
துயருறும் மக்களை;
சாராய இனஆளுகையி லிருந்து
மீட்க பாடிட்டது தவறோ?
மீறினராமே சட்டம்! கோவனும்...
சிறையுள் எதற்கு?
No comments:
Post a Comment