Thursday, 3 January 2013

மரணமடைந்த டெல்லி மாணவிக்கு...

 All Job Advices Sites

மரணமடைந்த டெல்லி மாணவிக்கு ஆழ்ந்த இரங்கலையும்
அவரது குடுமத்தினருக்கும் உறவினர்கட்கும் பெரும்
துயரத்துடன் ஆறுதலையும் ஆக்கப்பூர்வமாக நடவடிக்கைகளை
மேற்கொண்டிட்ட போராளிகட்கு முழுமையான ஆதரவையும்...

கவிதைச்சிட்டு தெரிவிக்கின்றது!



காம மிருகங்களே!





கடவுள் இல்லவே இல்லை...
இதை நிரூபிக்க...
உங்களுக்கு வேறு -
அறிவு வழியே...
தென்பட வில்லையோ?


கொடூரமானவர்களே!
குற்றுயிராய் மயங்கிட்ட
அந்தப் பெண்
இந்திய நாட்டவள் என்பதால் -
உங்களின்...
இன்னொரு சகோதரியே!

ஆண்டவா!
நீ,  இருப்பதாக
போற்றப்படுவது,
அனைத்து உயிர்களையும்
நீயே படைத்ததாக...
நம்பப்படுவது,
பொய்யல்ல என்றால்...
மகளிர் மீது
வேதனைகள் தொடரலாமோ?

நின் கண்முன்,
ஆறு வெறிபிடித்த ஓநாய்கள்...
ஒன்றன்பின் ஒன்றாய்
மானுட நாகரிக,
உடலுறவு ஒழுக்கத்தை
அருவறுப்பாக்க...
டில்லியில் ஒரு புறா
சிதைந்து புதைந்ததே!


தென்
மாநிலங்களிலும்
இந்நிலைமை...
தொடர்கின்றனவே!


சாதிமதம் விலகு அழியுமே, பெண்ணடிமைக் களமே!

கழுதைப் பொதிசுமக்கும்; காண்(கின்ற) இராப்பகற்
பொழுதைப் புவிசுமக்கும்; நிழல்தரும் ஆலம் -

விழுதை மண்சுமக்கும்; விழிப்புணர்வு இல்லாதோர்-பற்
பழுதை எகிற்சுமக்கும்; பாவையுள் ஆணும்முயங்க, கண்ணீருள்
முழுகி... பெண்மட்டும் வாழ்நாள் முழுதும்துயர்! சுமப்பதோ?

தலைவிதி எழுத்து சொல்லும் பொய் தெய்வத்தால் அல்ல;
பிழையாய் மானுடத்தை பிரித்தொடுக்கும் கற்பனை மணற்கயிரே!

அழியுமே, சாதிமதம் விலகு, ஆணாதிக்க பெண்ணடிமைத் தளமே!


பெண்மையே வரும் தலைமுறை வேர்அம்மா!


அவள்:     பெண்னின்பிறப்பும்தேவையா? - அவள்
                   பிறந்திடதுன்பம்தானம்மா!

தோழி:    பெண்ணேவரும்தலைமுறைவேர்அம்மா!
     பெண்மையே, உலகுக்குஉயிர்ப்பின்கருஅம்மா!

[தொடர்ச்சியைக் காட்டு]



Show large loving, to your parents;
As such wishes on your wife;
Learn good characters,
For children and country;

Aim to remove...
The difference among nations;
Plan your thoughts, for uniting people;
And grant you yourself,
For Mother Tongue’s growing!






Wednesday, 2 January 2013

பொங்கல் இனிப்போடு...சிட்டே சிறகுவிரிசெல்!

All Job Advices Sites


                                                            Willswords Tamil Twinkles
WELCOME YOU!
                                                                                                                                                 பொங்கல் இனிப்போடு...
புத்தாண்டில்வாழ்த்துகிறோம்!
சிட்டே சிறகுவிரிசெல்!

                                                                                                                                                                  பொங்கலிடு திங்களிது புத்தாண்டில் வாழ்த்துகிறோம்!
சென்றுலகு சுற்றிவந்(து) எங்களிடம் - பொங்கல்!
எத்தனைப்பேர் வீடுகளில் பொங்குதென் றேசொல்ல...
சிட்டே சிறகு விரி!

எட்டுத் திசைசென்றே எட்டாத செய்திகளை,
கட்டுக் கதைவிலகி கற்பனைகள் சேராது,
கட்டுரையாய் காவியமாய் கண்டுவரக் காயமெங்கும்,
சிட்டே சிறகு விரி!  ரி!                                                                                                                                                             
பற்றிஎரி யும்வயிற்றைப் பாச முடன்தடவி,                                            சட்டினியைத் தொட்டுதினம் சாதம்எனக் கூழ்களியை,
பிட்டுண்டே இன்றும் பிழைப்போர் உயர்வுபெற,
சிட்டே சிறகு விரி!

தொட்டுகரம் தாலிகட்டி தூயவளை கொடுமைசெய்து,
தட்சணைகள் கேட்டுத்தரம் தாழ்ந்து மறந்தவனை,
கட்டி இழுத்துவந்து காலில் விழச்செய்ய...
சிட்டே சிறகு வரி!

கொட்டும் பனிமலையை விட்டும் சமவெளியை,
தொட்டும் அலைகடலுள் தூங்குகின்ற கங்கையினை,
வெட்டிகால் வாய்வழியே வீழச்செய் காவிரியுள்!
சிட்டே சிறகு சிறகு வரி!
 
சாதி மத வகுப்பு சண்டை ஒழி நாட்டுமக்கள்...
நீதிபெற நீஉயரு; நீயுயர பேதமறு!
புத்தாண்டில் வாழ்த்துகின்றோம் பொங்கல் இனிப்போடு,
சிட்டே சிறகுவிரி செல்!

                Recent verses:   மதம் வகுப்பு விலகி தேசியம் பேசு அது நாட்டுப்பற்று
                                                      
மூளைநிலை ஆய்வில் கருஆன கவிதைகள்!
                                                          சுவாசயியக்கம்... கழலஉடலம் ஆவிபேசுமோ?

                      Newness:         மரணமடைந்த டெல்லி மாணவிக்கு…       

 
Willswords Tamil twinkles  WELCOME YOU!
  

Who are preventing Peace Entry?
Say in our country’s unity!
If religions or classes’ believers
Why should there be different opinions?
In peoples’ lives and nations thoughts;                           [Next]