ஒற்றுமை வளம் உலக நலம்!
முன்பக்கத் தொடர்சி (Page-2)
7) முதலாவதாக தனி ஒரு குடும்பத்துக்கு மற்றும் குடும்ப
உபயோகத்திற்கு அவசியமானவை எவை என்பதுப்பற்றி அறிய முற்படு வோம். (1) குடும்ப உபயோகத்துக்கு சுமார் ஒரு ஏக்கர் நிலம்; அந்நிலத்தில் சுமார் அரை ஏக்கர் மிகாமல் ஒரு வசிப்பிடம் (அனைத்து வசதிகளுடன் கூடியது) (2) குடும்ப உறுப்பினர்கள் பதினெட்டு வயதைத் தாண்டிட்ட ஒவ்வொருக்கும் மனித நேயத்துடன் கல்வி ஆதாரத்தில் வேலை; (3) தேவைக்கேற்ற சம்பளம்; (4) குடும்ப உபயோகத்துக்கு இரண்டு கார்கள்; (5) உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பைக் மற்றும் சைக்கிள்கள் (6) ஒவ்வொரு குடும்பம்பத்தினருக்கும் மகளிர் உபயோகத்துக்கு மற்றும் பிற அவசரத் தேவைகட்கு ஒரு நூறு பவுன்களுக்கு மேற்படாமல் பிளாட்டினம் தங்கம் வெள்ளி நகைகள்; (7) கல்வி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புக்களில் (கல்வி துவக்கநிலை முதலாக) யார் எந்த அளவுக்கு கற்க விரும்புகின்றார்களோ படிப்புகாலம் முழுமைக்கும் படிப்புச் சார்ந்த செலவுகள் அனைத்தும்; மற்றும் ஆற்றல் ஆதாரங்களில் அனைவருக்கும் அரசு ஏற்பாட்டில் (வெளிநாடுகளில் உயர்படிப்பு உட்பட) இலவசம்; (8) எல்லோர்க்கும் அவ்வப்போது அல்லது எப்போதாவது அல்லது நிரந்தரமாக ஏற்படுகின்ற உடல்நலம் குறைவு (நோய்) எத்தகையதாக இருப்பினும் பாகுப்பாடு ஏதுமற்ற மருத்துவம்; மற்றும் அக்காலங்களில் உணவு உடை அறைகள்வசதி அரசு பொருப்பில் முற்றுமாக இலவசம்; (9) குடியிருப்புப் பகுதியிலிருந்து அவரவர் பணியிடங்களுக்கு பணியாளர்கட்கும்; அவ்வாறே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் சென்றுவர மாணவர்கட்கும் (கார்பயணம் தவிர்போருக்கு) பேருந்து மற்றும் ஊருந்து (ஆட்டோ) போகவரப் பயணம் இலவசம்; என்கின்ற திடதிட்டங்கள் மற்றும் கொள்கைகள் பேரில் ஒரு அரசானது செயற்படுமாறு அமையப் பெறுமானால்... இப்போது தெரிவியுங்கள்... மேற்கொண்டு அவசியமானதாக ஒவ்வொரு குடும்பத் துக்கும் வேறுஎன்ன வாழ்நாட்களில் இருக்கமுடியும். 8) அந்தப்படிக்கு ஒரு குடும்பத்தினர் அடிப்படை அவசியங்களாவன: 1) சுமார் ஒரு ஏக்கர் நிலம்; அரை ஏக்கரில் ஒரு வசிப்பிடம்
(அனைத்து வசதிகளுடனும் கூடியது)
2) குடும்ப உபயோகத்துக்கு இரண்டு கார்கள்; 3) உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பைக் மற்றும்
சைக்கிள்கள்
4) குடும்ப மகளிர் உபயோகத்துக்காகவும் மற்றும் குடும்பத்தினர்
அவசரத் தேவைகட்காகவும் ஒரு நூறு பவுன்களுக்கு
மேற்படாமல் பிளாட்டினம் தங்கம் வெள்ளி நகைகள்;
-- என்று தனியாரது குடும்ப உபயோகத்துக்கு சொத்து உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்படலாம். 9) மேற்குறிப்பிட்டவாறு சொத்துக்களை அனுபவிக்கும் எல்லை யானது அனைவருக்கும் பொதுவாக மற்றும் சமமாக ஒரு வரம்புக்குள் அடங்கிடும்போது பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மக்களிடையே தானாக மறையும்; போலி ஆர்ப்பாட்டங்களும் பொருளாதார வீணடிப்புக் களும் தேவையற்றது என்று மக்களே முடிவுசெய்திடும் நிலைமையும் எதிர்காலத்தில் உருவாகிடும் என்பது நிச்சயம். * முழுக்கவிதையும் படிக்க |
Wednesday, 24 October 2012
ஒற்றுமை வளம் உலக நலம்!
Tuesday, 16 October 2012
உலகம், கலகம் விலகி நலம் பெற...
|
மரமோ எரிந்தால் கரியாகும்! மக்கிப் புதைந்தால் உரமாகும்! மனிதாநீ மடிந்தால், சவம்; எதுவாகும்? மண்ணுள் அழிந்து மண்ணாகும்! குடும்பத் தேவைக் கேற்ப நிலபுலங்கள் சொத்துஉரிமைக்கும் உச்ச வரம்புகண்டு, கொள்ளுப் பேரர்காலம் முடியும் மட்டும் செல்லும்வரம்பு என்று விதிகள் கொண்டு,
அனைவர்கும் கல்விவேலை வீடுபோன்று மருத்துவ
அவசியமும், வழங்க அரசுகள் உரிய சட்டம்கொணர, ஊழலும் வறுமையும் பேதங்களும் மாளும்! ஒற்றுமை உயிர்க்கும் சுரண்டளும் சுருளும்! தலைஎழுத்து தெய்வம் மதவகுப்பு மோதல்களும், தாமாக பிற்காலத்தில் நாட்டுள் கரையும்! அறிவுநூல்கலொடு கல்வியைக் கேட்டாலும் - நீநம்பும் ஆண்டவன் இதோஎன்று உன்முன் வராது! அரசுப்பணிகளிலே சேர்வதற்குக் கும்பிட்டு - தேடு அவன்உடலம் உயிரோடு எங்கும்காட்சி தராது! எல்லோர்கும் வேலை நாட்டுக்கு வலிமை - பேதம் இல்லாமல் அடைவதுஉன் உரிமைபெருமை! கல்விவேலைகள் அனைவருமே பெறும்படிக்கு - நேர்மை காப்பது எப்போதும் ஆளுவோரின் கடமை! வாழ்வதும் பிறப்புஅன்ன ஒருமுறைதான் - அதுபோல் சாகும் நிலவரமும் ஒருமுறைதான்! - ஒன்றுப்பட்டு மகிழட்டும் வாழைப்பூ சோலைகளாய்; அரசுகளே! நிகழஅது வாழும்; இனிதொடர்கிற தலைமுறைகள்தான்!
To
go Page - 1,
|
To go Page - 1,
(click) :
நாட்டு
ஒற்றுமைக்கு
அறிக்கை/
கவிதைகள் சொடுக்கு :
அறிவியல்
+ காதல்
கவிதைகள்:
சொடுக்கு :
என் - இடதுபுறத்து இருதயமே! |
Subscribe to:
Posts (Atom)
