Monday, 1 August 2016

உன்னுள் மின்னல்! எழில்துப்ப விம்மும்ஓர் முத்திரையாய்...



    ஓவியம் :    Mermaids Page

மலர்கள்விரிய மணம் காற்றில் உலாவ...
சுழலும்என் நில​மே!

கடலின் அலை நீளம்...
அறிவியலால் கணிக்க  இயலும்!

ஆனால்-நம் காதலின்-
அகலம், ஆழம், நீளம், உயரம்...

எதுவும் அளவிடுதலுக்கு-
அப்பாற்பட்டது!

என்றாலும்நீ ஆய்வுகள் செய்திட-
என்நாணம் ஒருநாளும்... 
தடையாய் இருந்திட்டதில்லை!


அன்னைத் தமிழ்அடி முடிவுஅன்ன விண்ணே!
உன்றன் தேகம் அழகுகளை... விரித்திடு​தே!

ஆச்சரிய குறியேபோல் உன்னுள் மின்னல்!
பூச்​​சொரிய  விம்மும் ஓர்தார​கையாய்!
பாச்சிதறும் வான்உன் வனப்பூ மாறிட்டதே!

​தேயாஎன் ஆகாயம் சிரித்திட புலரும் நிலவும்...
ஆய்கின்றேன்!  அங்கே நிலவைமூடி விலகி-
அழகுக் காட்டிடும் முகில்களால், நோயுற்றேன்!

மேகத்துள் பொன்னுள் கொடியாய் - ஓர்
வெடிப்பைப் பார்க்கின்றேன் - அது
நிலவின் மைய ஓடையாய் அ​சைய... அதனுள்
நனவில்நீ  நீந்திடவும் வாடுகின்ன்றேன்!

No comments:

Post a Comment