Wednesday, 11 November 2015

உன்னால் எனக்கு காத​லே... வாழ்கை ஆயிற்று!

 
   Photo:   Kevin Howard


உ ன் னா ல் தா ன்  மா றி னே ன்
உ ற வா க  ஆ கி னே ன்!

உன்னிலிருந்து
       காதல் விதைப்பெற்றேன்!
உன்னிலிருந்து
       கற்பனைக் கொடிவளர்த்தேன்!
உன்னிலிருந்து கவிதை -
       மகரந்தங்களை தூவிவிட்​டேன்!
உன்னிலிருந்து கனிகள்மணங்களை
       காற்றில் உதிர்த்திட்டேன்!

என்னால் நான்உன்
       துணையை விலகிட்டேன்!
என்னால்நான் குடும்பத்தைத்
       தொலைத்துவிட்டேன்!
என்னால் என்றன் -
       உறக்கம் மறித்திட்டது
என்றன்உயிரை
       நம்காதல் காப்பாற்று கின்றது!

உன்னால் என்றன்
       சிந்தனை முளைவிட்டது!
உன்னால் என்றன்
       கற்பனைகள் விரிந்திட்டன!
உன்னால் என்னுள்
       காவிய கவிதைகள் மணக்கின்றன!
உன்னால் எனக்கு
       காத​லே வாழ்கை ஆயிற்று!

Monday, 2 November 2015

டாஸ்மாக்குக்கு எதிராக பாடல்!

 
    தகவலும் பு​கைப்படமும்:    Prakash JP


நாறிடும் கூவம் ஆறுஉன் -
       நாக்குவிரும்பிடும் மதுச்சாறு!

போரிடும் அறிவுப் புலன்களும்,
       உடலும்கெட... மதிமயக்கி;

தேரேறும்! ​மதநோய் பரப்பும்
       சாதிகிருமிகள் ​தெரு​தெரு புழுக்க...

சோருதல் அளித்து, படிப்பவனை...
        பள்ளிவிலக தூண்டும்!


சேறினுள் சிக்கிட்ட விளங்கா படகு;  

        மதுவிற்கும் அரசு!  போதை...

தூறுகளுள் ஆதாயம் நாட... ஆக, 
        துயருறும் மக்களை;

சாராய இனஆளுகையி லிருந்து   
        மீட்க பாடிட்டது  தவறோ?

மீறினராமே  சட்டம்!  கோவனும்...
        சிறையுள் எதற்கு?