Monday 16 March 2015

என்னோடு அருகில்நீ இல்லை என்பதால்...



   நிழற்படம் :    Anil Mittal 
                                               Bollywood Masala



உன்னைச் சேரும் வழியறியாமல் - துன்ப
சேற்றுள் நெல்நாற்றென உழல்கின்றேன்!
என்னைநீ காதலித்திட்டது பிழைகள் அல்லவே
எதனால் இரவுகளில் உறக்கம் இழக்கின்றேன்!

நேற்றைய துயரங்கள் முழுவதும் - இன்று
நீஅறியாமல் கவிதைகள் ஆகின்றன!
இன்றைய உன்நனவுகள் யாவும் - சொல்லும்
கடவுளேப் போல் கற்பனை ஆகிடுமோ?

உயிரே! உணர்வே! என்றாய் - காதல்
சூறாவளியாய் உன்னோடு சுழன்றேன்!-என்றன்
உடலோடு உன்றன் அன்பைதை தைத்திட்டால்
அந்த உணர்வுக்குள் என்றன் உயிர் இயங்குமே!

என் உடலுள் உன்ஆசைகளை விதையேன்!
காதல்பூ மணந்து உன்றன் கரங்களில் - உயிர்
கனிகளைநீ மகிழ வழங்குமே! - நம்மை
ஒவ்வோர் நெடியும் இரவில் உறக்கம் தழுவிடுமே!

என்னோடு அருகில்நீ இல்லை என்பதால்,
நம்காதல் கவிதையாய் மாறிற்று! - நாளும்
கவிதையே என்னை ஆளுகின்றது! கவிதை
காதலும் கனவேபோல் மாறிடுமோ?

நீஎன்னுள் இருந்து விலகி - நீண்ட
தூரம் சென்று நோக்க - என்றன்
மனது உளர்ந்து மக்கிப் போயிற்று!
உன்னை அடைய உள்ளம் ஏங்குகின்றது!

என்னைநீ இறுகி அணைக்கும்நாளில்
உன்றன் இதய சுவாசக் காற்றை - என்
மூக்கும் உள்வாங்கும்; அப்போது - நம்
காதல் நெகிழந்து மகிழந்து இயங்கும்!

உன்னுள் உயிர்த்து மகிழ்ந்து இதயம்
இன்று சுருங்கி நொருங்க - எனக்குள்
சுவாசம் சுருண்டு போயிற்று! வா!முத்தமிடு;
மீண்டும் உடலம்என் உயிரை மீட்கும்!

உனக்குள் என்அன்பு ஒன்றுமானால்
கிறங்கும் கிளர்ச்சி மயக்கம் தெளியும்;
நமக்குள் தளர்நது தகர்ந்த உறக்கம்
காதல் வளர கிளர செழிக்கும்!

No comments:

Post a Comment