Photos: sanjay shinde
இயற்கைப் பெண் தன்னைப் பாடென
ஊடுறுவி நோக்க...
முதல்நாள் உன்னைநான் பார்க்க
உன்கூந்தல்...
இரவை இருட்டாக்கிட்டது!
அடர்ந்த ஓர்முகிலாகி,
நிலவை மறைத்திட்டது!
இரண்டாம்நாள் முகிலாய்,
மாறிட்ட உன்கூந்தல்...
இருமலை முகடுகளை வருட,
அந்த உரசல் கண்டு தடுமாறி;
ஓர் அருவி தாவிக்குதித்து... நகர்ந்திட்டது!!
மூன்றாம் நாள் பார்த்ததுமே...
உடன் உன்பார்வை,
பகலைத் தோற்றுவித்தது!
காதல் குயில் கவிதைப் பாடிட்டது!
நான்காம்நாள் எழிற் கூந்தல்...
தென்றல்பட்டு,
சற்றேஅகல...
உன்எழில் மலைகள் பார்என்றே,
நிமிர்ந்து விண்ணை நோக்கிட்டன!
ஐந்தாம்நாள் பகலில்...
மலைகள் அடி வாரத்தில்,
ஓர்விரிவுற்ற...
கொளுந்து வாழைஇலை அழகில்,
சமவெளி...
அற்புதமாய் காட்சித் தந்திட்டது!
ஆறாம்நாள் என்பார்வையில்,
மது அருந்திட்ட குதிரைஅன்ன;
அடங்கா ஓர்நதியின் எழில்,
கூடுதுறை சிரிக்க...
என்கண்கள் தொட்டன!
ஏழாம்நாள் அரைமறைவு...
முகில் பிறையாய்;
இமை மூடிட்ட;
எழில் நிலவைக் காண,
உன்விழகளை என்விழிகள்...
அழகு இதுவே எனமுயங்கிட்டன!
இயற்கை எனக்காக உரு ஆயிற்று!
நானோ...
நண்பா! உன் காதலுக்காக...
கரு ஆகினேன்!