Monday, 23 February 2015

நீ நலமாய் இருந்திட வேண்டும்! உன் நலம்மீது...


  Photo:   shahenai.com


 
அவன்:

நீ நலமாய் இருந்திட வேண்டும்! - உன்
நலம்மீது எந்நாளும் - நான்
சுகமே உணர்ந்திட வேண்டும்!

அவள்:

நீ பலமாய் இருந்திட வேண்டும் - உன்
ஆளுமை கீழே நான்மட்டும் நிழலாய்...
உன்னோடு இணைந்து இயங்கிட வேண்டும்!

அவன்:

நீ வளமாய் இருந்திட வேண்டும்! - காதல்
பூமி தளம் உன்னை நான்கண்டு சுழல கழலாமல்;
சுழற்றிடும் நிலவாய் எந்நாளும் சிரித்திட வேண்டும்!

இருவரும்::


அன்புக்களத்துள்  இணைந்து செயாலற்ற  வேண்டும்!
நமக்குள் ஒற்றுமையே உலகில் உயர்வானதென்று...
போடடியிடும் ஆசைகளில் இருவருமே ஒன்றி;
வெற்றி கண்டு வாழ்வில்  மகிழ்ந்து முன்னேற வேண்டும்!



Thursday, 12 February 2015

என்னைநீ ஊடுறுவிப் பார்த்ததுமே...


  Photo:  Found Pix


விரிக்கும் இதழ்களுள் வெளிப்படும்  தேனுள்;
தெரிக்கும் ஒளியில் திறக்கும் மலரில்;
சிரிக்கும்என்அழகில் தினமும் நிலவில்;
சரிக்கும் காதல் சரித்திரம் நீயே! 

என்னைநீ ஊடுறுவிப் பார்த்ததுமே;
உன்விழிகள் முழுவதுமாய் ஈர்த்திட்டன!
என்றன் நினைவுகள் ஆசை...
உணர்வுகளைக் கோர்த்திட்டன!

உன்னைப் பார்த்திட்டதுமே என் மனமோ...
கவிதை முத்துக்களாக சேகரித்து;
கற்பனை மாலை செய்து மகிழ்கின்றது!
துன்பமோ, இல்லை இன்பமோ, அன்பு?

உன்னை ஆய்வதற்கு தினம் வாடிடுது!
உன்றன்மனம் அறிவதற்குத் திண்டாடுது!
ஆப்பதனை அசைத்திட்ட குரங்கெனவே,
என்நிலைமை என்னைஉரு மாறிட்டது!

உன்னால் உறக்கம் என்னை கைவிட்டது!