Photo: ஸ்ரீ ( SRI )
உன் சுவாசத்தோடு நீந்திட்ட
தால்காதல்
காற்றுள் கரைந்துற்றதோ?
உருகுகின்றேன் உன் வசம்;
தேடிட்டேன்
என்உயிர் சகவாசம்! உன்றன்-
இதயத்தில் செய்கின்றது வாசம்!
காற்றுள்ளே நேற்றுநீ செய்திட்ட சுவாசம்;
காலமெல்லாம் இதயத்துள் பேசும்!
உன் இதழ்கள்வழி அனுப்பிட்ட தூது...
என்உச்சந் தலைக்குள் நுழைந்து-
இன்று
மூளைக்கு தருகின்றது வேது!
சொந்தத்தில் பெண்ணடிமை
எங்கே இல்லை!
பந்தத்தில் பணம் பண்ணும் சாதிக்குள்...
அன்பு, எவரிடத்தும் காதல் ஆதாரத்தில் இல்லை!
உன்னைநான் பார்த்திட்ட நாள் முதலாய் -
என்
மண்டைக்குள் மூளை கட்டுப்பாட்டில்இல்லை!