Photos: Princy chandran
ஒரு பூவுள் சிறைப்பட்ட வண்டின் கதை!
சிறிது முன்பு அந்தி நேரம் இந்தப் பூவுக்குள்,
ஒரு வண்டு போயிற்று!
வண்டு சென்று வெகு நேரமாயிற்று;
ஆனால் திரும்பவே இல்லை!
முயங்கிய வண்டின் இசை ஓசை கேட்டு - பூ
மயக்கம் கண்டது! அதுதந்த மயக்கத்தில்
தன்னை மறந்துமது இதழ்களால் - வெளியே
வண்டை வரவிடாமல் மூடிக்கொண்டது!
மலரை விலகி வெளியில்வர வழிஅறியாமல் - ஆசை
சுழலுக்குள் மூழ்கியஓர் அடிமையாகி - வண்டு
சேற்றுக்குள் தத்தளிக்கும் குரங்கே போன்று - சுதந்திர
காற்றைச் சுவாசிக்க (இப்போது) ஏங்குகின்றது!
வெளியேவர முயன்று மலர்இதழ் சுவர்களில்
தலையால் வண்டு முட்டுகின்றது! தான் பிறந்தநாளில்
எழுதிய ஆண்டவன்(தலை) எழுத்துஇது என்று
முழுகித் தேனுள்ளே...வண்டு சோர்ந்து துவளுகின்றது!
விடியலைத் தரவே வந்த ஆதவன் கண்டு - குளிர்ந்த
பனித்துளி இறங்க மலருக்குள் மயக்கம் தெளிந்தது! - உடன்
மதுவுள் கிறங்கிட்ட வண்டு வெளிவர உதவ - பூ தன்
இதழ்களை மெல்ல விரிய சிரித்திட்டது! - வண்டு மகிழ்ந்து கொடிமலரை மீண்டும் சுற்றுகின்றது!
Saturday, 20 April 2013
சற்று முன்பு இந்தப் பூவுக்குள், ஒரு வண்டு போயிற்று!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment