Sunday, 10 July 2016

காதலித்தாய் காதலா! நான்உன்னுள் வாழ்ந்திட...


Public
7h
Photo
பட்டுப்பா வாடையாள் நோக்கஉன்னை...
பெண்ணுள்ஏன்...
கட்டிடு(து) தேன்கூடு சிட்டு?

கூடுசிட்டு கண்டு குமரிநகைக் கஉன்னுள்;
ஆடிடாதோ காதல்ஆசை ஊஞ்சல்!

ஊஞ்சல்ஆட காதல்தேன் உண்ணும்...
விழிகள்உன்னால்--
காய்ந்தமா டாகிடக் கண்டேன்!

காய்ந்தமா டாகிடநீ கன்னிநான்...
நாணகாண்;
சாய்ந்திட்ட தேபொழுதும் தான்!

பாயும்மா டாகிடும்முன் பாய்ந்தேநீ
வந்துமெல்ல...
ஓயவை ஓசைஆசை யை!

கட்டுக் குழலசைய காதல்நீ செய்என்றே...
முட்டுதே மெளன விழிகள்!

கொடிபூக்க காய்ப்போல் குனியாதே
உன்றன்...
மடித்தந்து என்னுள் மகிழ்!

காதலித்தாய் காதலா! நான்உன்னுள்--
வாழ்ந்திட...
சாதி விலகினேன்நீ சாதி!

Photo

Labels: