ஆழியுள் மூழ்கி அகிலத்தை மீட்டாயாம்;
பாலுள் முயங்கும் பரந்தாமா! ஒவ்வொரு
நாளும் உலகில் நடந்துறும் சண்டைஎவ்
வேளையும் வேண்டாமே... வா!கா!
படைத்தோர் யார்? படைப்பவர் யார்? என்றால்;
கடமைஎன அனைவர்கும் காய்கனி தானியம் ;
படைப்பதற்கு ஏர்உழுதும் அழுகின்ற விவசாயி!
உடல்கருகி உழைத்து மடிகின்ற தொழிலாளி!
ஆண்டவன் உண்டேன்பதாக ஆராயாது நம்பி
அறிவியலை நிராகரிக்கின்ற அறிவே! உன்உரு
ஆக்கிட்டோர் இருவர்; தகப்பனும் தாயுமே!
ஆயினும்நீ ஆராதிப்பதுஎது? கடவுள் சூன்யமே!
அற்பமே! ஓர்நாள் உன்னுடல் உயிரை விலக்கி...
அப்புறப் படுத்திடுவதோ காலமே; என்றறிவாய்!
குப்புறப் படுத்துநீ வணங்கும் நம்பிக்கை விலகு!
கற்பனை பொய்க்கு விளம்பரம் எதற்கு?