Wednesday, 23 December 2015

பந்தத்தில் பணம் பண்ணும் சாதிக்குள்...

Embedded image permalink 


Photo:  35m



உன் சுவாசத்தோடு நீந்திட்ட தால்காதல்
காற்றுள் கரைந்துற்ற​​தோ?
உருகுகின்றேன் ன் வசம்;
தேடிட்டேன் என்உயிர் சகவாசம்! உன்றன்-
இதயத்தில் செய்கின்றது வாசம்!

காற்றுள்ளே நேற்றுநீ செய்திட்ட சுவாசம்;
காலமெல்லாம் இதயத்துள் பேசும்!
உன் இதழ்கள்வழி அனுப்பிட்ட தூது...
என்உச்சந் தலைக்குள் நுழைந்து-
இன்று மூளைக்கு தருகின்றது வேது!

சொந்தத்தில் பெண்ணடிமை எங்​கே இல்லை!
பந்தத்தில் பணம் பண்ணும் சாதிக்குள்... 
அன்பு, எவரிடத்தும் காதல் ஆதாரத்தில் இல்லை!
உன்னைநான் பார்த்திட்ட நாள் முதலாய் - என்
மண்டைக்குள் மூளை கட்டுப்பாட்டில்இல்லை!