ஓவியம்: Debra Simpson
தினமும் உன்னை நினைத்து துருவ...
மலைப்பனி ஆகினேன்!
மலைப்பனி ஆகினேன்!
என்னைநீ பார்க்க முற்பட்டால் உருகி...
நதியாகிடுவேன்!
என்னோடு பழகும் நிலைமை உருவானால்...
கூடு துறை யாகிடுவோம்!
என்னை மீண்டும் பிரிய முடிவெடுத்தால்...
அதில் ஆவியாகி மேலே போவேன்!
இணைய நினைத்து மணந்தால்... உன்னை,
மழையாக்கி பூமிமேல் குதிக்க செய்வேன்!
காட்டுக்குள்ளே காணும் மேடு மேலே...
பாட்டு வரவில்லை பாடு மூங்கில் கிளியே!
சேற்றுக்குள்ளே சிணுங்கும் வயல்தான்அன்ன....
ஆற்றுக்குள்ளே ஆசையை வைத்தேன்;
கடியேன் என்றன் அழகுக் கயலே!
ஏட்டுக்குள்ளே [ஏதோ] கிறுக்கும் சின்னப்பையன்...
தோட்டத்திலே, துள்ளும் மானே அன்ன...
விளையாடும் என்றன் சீட்டுக்குள்ளே;
கேட்டிட்டஉன் அழகிய காதல் ராணியை...
காட்டிடேனே ராசா நீ போடணுமே ஏசா!