Friday, 31 July 2015

யாதும் எம்ஊரே! யாவரும் கேளிர்என ஓதுசு ரண்டல் ஒழியும்!


   ஓவியம் :    Maalaimalar Tamil மாலைமலர் தமிழ்

சாதிஎனும் சொல்லுக்கு சாற்றுகபொருள் யாதாம்?
இறைவன், கடவுள், ஆண்டவன், தெய்வம்!
இவையாவும் அர்த்தங்களாம்! இப்போது செப்பு;

சாதி என்றால் இறைவன்; சாதிச் செயல்...
கடவுள் செயல்; சாதித் தலையெழுத்து என்றால்,
சாதியால்(இறைவனால்) ஆனதலை யெழுத்து!

இன்னும் சாதிவிதி, தெய்வ விதி, என்றும்;
முன்னிருந்த சாதிதொடர்புச் சொற்கள்...
உருமாற்றம்உற, இறைவன் கடவுள்என ஆகினவே!

சாதிஓர் கற்பனைசொல்! சாதிசிந்துநதி,சாதிசந்துநதி,
சாதிசந்நதிகள்; ஆகிஅதுவே தெய்வசந்நதி, ஆயிற்று!
சாதிசந்நதி, சாதி சந்ததி என்றாயிற்று!

சாதிசந்ததி அன்ன,  தெய்வசந்நதி... தெய்வசந்ததி,
ஆகிஅந்தஇனன் இன்று அந்தணன் என்றாகினானே!

யாதும் எம்ஊரே! யாவரும் கேளிர்என
ஓதுசு ரண்டல் ஒழியும்!

இரவும் பகலும் இணைதலுக்கு...
ஒருநாள் என்பது அடையாளம்!

ஆணும் பெண்ணும்சமமே என்பது,                                                         
அறிவுள்ள மானுட குணத்துக்கு அடையாளம்!

மானுடத்தை குலைக்கும் கறைகட்கு...
வேற்றுமைச் சொற்கள் அடையாளம்!

வேற்றுமை ஆதிக்கம் ஊழல் செய்வோர்கு,
சுயநலமத அடிமைகள் அடையாளம்!

மானுடத்துக்கு உறவொழுக்க... அடையாளம்?
கற்புப்போற்றும் ஆண்பெண் குறிகள் ஆதாரம்!

நல்ல நாடு என்னும் உயர்வுக்கு எதுஅடையாளம்?

ஒற்றுமை நேசிக்கும் தேசப்பற்றே... என்அறிவே!