குடும்பக்கட்டுப்பாடு செய்திடுவேன்!ஓரஞ்சுப் பொறியுணர்வும் உனை நெருடும்!ஈரஞ்சு மாதத்தில்என் பிஞ்சுவிரல் எனைவருடும்!மூவஞ்சு மாதத்தில்நம் முத்துநகை நமைத்திருடும்!நாலஞ்சு மாதத்திலே நடுவினிலே தான்படுக்கும்!ஐயஞ்சு மாதத்தில் அய்யாநான் தடுமாற...ஆரஞ்சுச் சுளையிதழ்கள் அத்தான் முகம்நனைக்கும்!ஏழஞ்சு மாதத்திலே இனியுமொரு கனிமழலை,எட்டஞ்சு மாதத்திலே பிரசவிக்கக் கருவாகும்!பாரஞ் சுமந்துஇடை பாவம்ஒ டிந்திடுமோ?ஈரஞ்சென் விரல்களும்உன் இடைப்பிடித்தே தளர்வுறுமோ?பத்தஞ்சு மாதத்தில்என் பத்தினியின் நலம்காக்க...ஒன்பதஞ்சு மாதத்தில் 'கு.க.' நான் செய்திடுவேன்!தனிப்பாடல்:மிதிலைஎழில் வனிதை அன்ன, விழிகளுள் காதல் மின்ன!இதழ்களை விரலோ, எண்ண!? உதடுகள் விரலை உண்ண! கதையினை புருவம் சொல்ல; கவிதைகளை பற்கள் அள்ள; இதயமும் கரும்போ என்ன? இமைகளும் கடிக்கின் றனவே!
No comments:
Post a Comment